உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அவொகாட்ரோ

விக்கிமூலம் இலிருந்து

அவொகாட்ரோ (Avogadro, 1776-1856) இத்தாலிய பௌதிக-ரசாயன அறிஞர். இவர் டியூரினில் பிறந்து, அங்கேயே கல்வி பயின்று, அங்குள்ள பல்கலைக் கழகத்திலேயே பேராசிரியராக இருந்தார். டால்டன் அணுக் கொள்கையை இவர் ஆராய்ந்து, ஒரே கன அளவுள்ள எல்லா வாயுக்களிலும் ஒரே அழுத்தத்திலும், வெப்பநிலையிலும் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை சமமானது என்ற முக்கியமான உண்மையைக் கண்டு பிடித்தார். இது அவொகாட்ரோவின் கருதுகோள் என வழங்குகிறது.