கலைக்களஞ்சியம்/அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்
Appearance
அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார்(19ஆம் நூற். முற்பகுதி) : இவர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி முதலியன.