கலைக்களஞ்சியம்/ஆகா கான்

விக்கிமூலம் இலிருந்து

ஆகா கான் (Aga Khan) என்பது இஸ்மாலி முஸ்லிம் வகுப்பினரின் சமயாசாரியரான ஹாசன் அலிஷா தாம் பிறந்த பாரசீக நாட்டினின்றும் வந்து பம்பாயில் குடியேறிய பொழுது அவ்வகுப்பினர் அளித்த பட்டப்பெயராகும். ஆகா என்பது தளபதி என்று பொருள் படும். இவரைச் சமயாசாரியராக ஏற்றுக் கொள்பவர் தொகை ஆறுகோடிக்கும் மிகுதியாம். இவர்கள் இந்தியா, நடு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, மொராக்கோ, சீனா, ஆப்கானிஸ்தானம், பாரசீகம், அரேபியா ஆகிய நாடுகளில் உளர்.

ஆகா கான் I ஹாசன் அலிஷா (1800-1881) நபி நாயகத்தின் மகளான பாத்திமாவின் சந்ததியில் வந்தவர். பாரசீக அரச குடும்பத்தினர். பாரசீகத்தின் கவர்னர்ஜெனரலாக இருந்து, மன்னர் கோபிக்கவே, பம்பாய்க்கு வந்துவிட்டார். பிரிட்டிஷாருக்கு ஆப்கானியப்போரில் உதவி செய்தார். பிரிட்டிஷார் அவருக்குச் சமஸ் தானாதிபதி (His Highness) என்னும் பட்டம் அளித்தார்கள்.

ஆகா கான் II: ஆகா அலிஷா (இ. 1885). முந்தியவரின் புதல்வர். நான்கு ஆண்டுகளே பதவி வகித்தார். தந்தையின் கொள்கைப்படியே நடந்தார். விக்டோரியா அரசி இவருக்குச் சர் பட்டம் அளித்தார். இவருக்குப்பின் இவருடைய புதல்வர் முகம்மது ஷா பதவி ஏற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆகா_கான்&oldid=1456335" இலிருந்து மீள்விக்கப்பட்டது