கலைக்களஞ்சியம்/ஆட்டவா
Appearance
ஆட்டவா (Ottawa) கானடாவின் தலைநகரம். அந்நாட்டுப் பெரிய நகரங்களுள் ஆறாவது. ஆட்டவா என்பது அங்கு முன்னால் வாழ்ந்த சிவப்பு இந்தியர்கள் வாணிபத்துக்கு வழங்கிய அடவே என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாம். இதன் அருகில் இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள. இங்கே பல்கலைக்கழகம் உண்டு. காகிதம் செய்தலும் மரம் அறுப்பதும் முக்கியத் தொழில்கள். ஆட்டவா ஆறு செயின்ட் லாரென்ஸ் ஆற்றின் முக்கிய உபநதியாகும். இது கானடாவிலுள்ள பெரிய ஆறுகளில் ஒன்று. மக் : 1,54,951 (1941).