உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆதோனி

விக்கிமூலம் இலிருந்து

ஆதோனி பல்லாரி மாவட்டத்தில் பல்லாரிக்கு அடுத்த பெரிய பட்டணம். அருகிலுள்ள குன்றின் மீது ஒரு பலமான கோட்டை உள்ளது. விஜயநகர அரசர்கட்குப் பெரிய அரணாக இருந்தது. ஒரு குன்றின் மீது கல்லால் செய்த பீரங்கியும் சில வெடி மருந்துச் சாலைகளும் காணப்படுகின்றன. ஜைன உருவங்கள் செதுக்கிய பாறைகளை ஜைனர்கள் பாதுகாத்து வருகிறார்கள். பருத்தி வியாபாரம் மிகுதி. இங்குச் செய்யும் சமக்காளங்கள் பேர் போனவை. இது ஒரு நகராட்சிப் பட்டணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆதோனி&oldid=1456739" இலிருந்து மீள்விக்கப்பட்டது