உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆத்தி

விக்கிமூலம் இலிருந்து

ஆத்தி ஒரு சிறிய மரம். சற்றுக் குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1-2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். இலையடிச் செதில்கள் சிறியவை, விரைவில் உதிர்ந்துவிடும். பூங்கொத்து சிறு ரசீம். பூ சற்று ஒரு தளச் சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல்போல இருக்கும் ; நுனியில் 5 பற்கள் காணும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும்; வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை ; தழுவு அடுக்குள்ளவை ; மேற்பக்கத்து இதழ் எல்லாவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும். கேசரங்கள் 10; எல்லாம் செம்மையாக வளர்ந்திருக்கும். சூலகத்திற்குச் சிறு காம்பு உண்டு. பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 - 12 அங்குல நீளமும், 4-1 அங்குல அகலமும் இருக்கும். வெடிக்காது. மரத்தின் பட்டை சொரசொரப்பாகக் கருமையாக இருக்கும். மரம் பழுப்பு நிறமுள்ளது; கடினமானது. நல்லவிறகு. உள் பட்டையிலிருந்து நல்ல நார் எடுத்து முரடான கயிறு திரிப்பதுண்டு. ஆத்திக்கு ஆர் என்றும் பெயர். இது ஒருவித மந்தாரை ; பாஹீனியா ராசிமோசா (Bauhinia racemosa) எனப்படும். லெகுமினோசீ குடும்பத்தில் சீசால்பீனியீ உட்குடும்பத்தைச் சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆத்தி&oldid=1456682" இலிருந்து மீள்விக்கப்பட்டது