உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆம்பூர்

விக்கிமூலம் இலிருந்து

ஆம்பூர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூர் தாலுகாவில் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. புகைவண்டி நிலையம் உண்டு. இங்கு எண்ணெய், நெய் வியாபாரம் மிகுதி. எளிதில் ஏறமுடியாத கோட்டை உண்டு. இங்குத்தான் முதன் முதல் ஐரோப்பியத் துருப்புக்கள் தங்கள் திறமையைக்காட்டினவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆம்பூர்&oldid=1456778" இலிருந்து மீள்விக்கப்பட்டது