கலைக்களஞ்சியம்/ஆர்க்கேடியா

விக்கிமூலம் இலிருந்து

ஆர்க்கேடியா (Arcadia) பண்டைக் கிரேக்கர்கள் பெலப்பனீஸசின் நடுப்பகுதியில் உள்ள அழகான மலைப்பிரதேசத்திற்குக் கொடுத்த பெயராம். அது போர் விளையும் ராச்சியமாக இருந்தது. கிமு 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் கிமு 66ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேந்து போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்ற பின் அவர்கள் படையில் ஆர்க்கேடியர்கள் சேர்ந்தனர். பான்(Pan) என்னும் தேவதையை இடையர்கள் முதன் முதலில் வழிபடத் துவங்கியது ஆர்க்கேடியாவிலேயே. அதிலிருந்து ஆர்க்கேடியா என்பது சாந்தமான கிராம வாழ்க்கை என்று பொருள் பெறலாயிற்று. சர் பிலிப் சிட்னி ஆர்க்கேடியா என்ற கதைக் காவியம் எழுதியுள்ளார்.