கலைக்களஞ்சியம்/ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ.
Appearance
ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ. (1848-1937) ஆங்கில ரசாயன அறிஞர். இவர் 1874ஆம் ஆண்டில் பேராசிரியரானார். 1876-ல் ராயல் சொசைட்டி. உறுப்பினரானார். கரிம ரசாயனத்தில் இவர் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். டெர்ப்பீன்கள், நாப்தலீன்கள் ஆகிய கரிமக் கூட்டுவகைகளை இவர் ஆராய்ந்தார்.