கலைக்களஞ்சியம்/ஆலரிக் II
Appearance
ஆலரிக் II ( ?-507) கீழைக் காத்தியர்களின் அரசன்; தந்தையான யூரிக் என்பவனுக்குப் பிறகு 484-ல் அரசனானான். ஸ்பெயின், முதலிய தென் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பிராங்குகளின் அரசனான குளோவிஸ் என்பவன் கிறிஸ்தவன் அல்லாத ஆலரிக் மீது படையெடுப்பது முறை யென்று நினைத்தான். பாயிட்டியர்ஸ் என்னுமிடத்தில் நடந்த போரில் ஆலரிக் கொல்லப்பட்டான்; அவன் படையும் தோற்றுச் சிதறுண்டது.