கலைக்களஞ்சியம்/ஆல்தீயா
Appearance
ஆல்தீயா பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப் பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு, இலையும், வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர் முதலிய பிரதேசங்களில் வளர்கின்றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது.