உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆல்மஜெஸ்ட்

விக்கிமூலம் இலிருந்து

ஆல்மஜெஸ்ட் (Almagest) என்னும் சொல் 'மிகப் பெரியது' என்று பொருள்படும். இது இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியாவிலிருந்த டாலமி என்னும் நிபுணர் எழுதிய சிறந்த நூல். அரபு மொழியில் பெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய வரலாற்று மத்திய காலத்தில் ஐரோப்பாவிற் பெரிதும் பயிலப்பட்டுவந்தது.

இதில் கணிதமும் வானவியலும் அடங்கி யிருக்கின்றன. “பூமியைச் சூரியன் சுற்றுகின்றது. மற்றக் கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன” என்று சொல்லும் டாலமி கொள்கை இந்த நூலில் கண்டது.