கலைக்களஞ்சியம்/ஆள்வார்

விக்கிமூலம் இலிருந்து

ஆள்வார்: இந்தியா சுதந்திரம் அடையாத முன் சுதேச சமஸ்தானமாயிருந்தது. இப்போது இந்திய யூனியனில் ராஜஸ்தான் ராச்சியத்துடன் இணைந்திருக்கிறது. இது பதினெட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன அரசனான பிரதாப் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ஆள்வார் நகரம். இதில் கோட்டையும், அகழியும், ஐந்து அரண்மனைகளும் உள்ளன. கிழக்குப் பகுதி நல்ல வளமானது. மேற்கே ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. மக் : 8,61,993(1951). நகரத்தின் மக் : 54,143 (1941).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆள்வார்&oldid=1459039" இலிருந்து மீள்விக்கப்பட்டது