கலைக்களஞ்சியம்/ஆவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

ஆவர்கள் டான், வால்கா ஆற்றுப்புறங்களிலிருந்து ஹூணர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 6ஆம் நூற்றாண்டில் புகுந்த ஒரு கூட்டத்தினர். டான்யூப் ஆற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வந்து தங்கிய இக் கூட்டத்தவர் ரோமானியப் பேரரசனாயிருந்த ஜஸ்டீனியனுக்கு உதவியாயிருந்தனர். லம்பார்டியர்களுக்கு உதவிசெய்து பன்னோனியாப் பிரதேசத்தைப் பெற்றுக்கொண்டனர். பால்கன் தீபகற்பத்திற் புகுந்து சூறையாடினர். இவர்களுடைய ஆதிக்கம் கருங்கடல் வரை எட்டிற்று. ஆயினும் 8ஆம் நூற்றாண்டில் பால்கன் பிரதேச மக்கள் தங்களுடைய கூட்டுமுயற்சியால் இவர்களுடைய ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்தனர். அந்நூற்றாண்டின் இறுதியில் ஷார்லிமேனால் ஒடுக்கப் பட்டபின் இவர்கள் வரலாறு முடிவடைகின்றது. இவர்கள் ஜெர்மானியர்களோடும், பல்கேரியர்களோடும் கலந்து விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆவர்கள்&oldid=1457674" இலிருந்து மீள்விக்கப்பட்டது