உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இகுவானா

விக்கிமூலம் இலிருந்து

இகுவானா (Iguana) அயன அமெரிக்காவிலுள்ள ஊர்வன. தோற்றத்தில் ஓணான் போன்றவை. இவற்றில் 300க்குமேற்பட்ட இனங்கள் உண்டு. காலிபோர்னியா முதல் பட்ட கோனியா வரையில் அகப்படும். இவை பெரும்பாலும் மரத்தில் வசிக்கும். சில தரையில் பாலைவன மணலிலும் பாறைகளிலும் வாழும். இவற்றுள் சில வகைகள் சில அங்குல நீளமும், சில வகைகள் பல அடி நீளமுமிருக்கும். பெரும்பாலும் பச்சை நிறமுள்ளவை. மோவாய்க்குக் கீழே பசுவுக்குள்ள அலை தாடி போல ஒரு தோல்மடிப்பு இருக்கும். நடுமுதுகில் செதில்கள் உயர்ந்திருக்கும். நடு முதுகில் செதில்கள் உயர்ந்திருக்கும். இகுவானா ஓணானைப்போல வெயிலில் காயும். அந்த நாட்டு மக்கள் கண்ணி வைத்து, இதன் தலையில் மாட்டி, இதைப் பிடித்து உண்பார்கள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இகுவானா&oldid=1462475" இலிருந்து மீள்விக்கப்பட்டது