கலைக்களஞ்சியம்/இங்கிலிஷ் கால்வாய்

விக்கிமூலம் இலிருந்து

இங்கிலிஷ் கால்வாய் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையிலுள்ள கடல். இதைப் பிரெஞ்சு மக்கள் லாமான்ஷே, அதாவது சட்டையின் கை என்று அழைக்கிறார்கள். இது உலகத்திலுள்ள முக்கியமான நீர்ப் பாதைகளுள் ஒன்று. நீளம் 350 மைல். இங்கிலாந்தும் பிரான்ஸும் ஒரு காலத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்ததாகப் புவியியலார் கருதுகிறார்கள். இக் கால்வாயில் வீசும் அலைகள் மிகக் கடுமையா யிருப்பதால், அவை நெப்போலியனையும் ஜெர்மானியரையும் இங்கி லாந்தின்மேல் படை யெடுக்க வொட்டாதபடி தடுத்து விட்டன. இங்கிலாந்துக்கு அருகிலுள்ள வைட்தீவும், பிரான்ஸுக்கு அருகிலுள்ள கால்வாய்த் தீவுகளும் மிக முக்கியமானவை. இக் கால்வாய் வழியாக வியாபாரக் கப்பல்கள் ஸ்காண்டினேவியாவுக்கும் ஜெர்மனிக்கும் செல்லுகின்றன. பலர் இதன் குறுக்கே நீந்திக்கடக்கும் போட்டியில் வெற்றி பெற்றனர். இங்கிலாந்துக் கரையில் டோவரும் பிரான்ஸுக் கரையில் கலேயும் ஒன்றுக்கொன்று மிக அருகிலுள்ள முக்கியமான துறைமுகங்கள்.