உள்ளடக்கத்துக்குச் செல்

கவிஞர் பேசுகிறார்/கவிஞர் உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

கவிஞன் உள்ளம்

விஞன் உள்ளும் புறமும் துருவி முத்துக் குளிப்பது போன்று உண்மையை, அழகைக் கண்டெத்துக் காட்டுபவன். கவிஞனுக்கும் புலவனுக்கும் மேதையில் வித்தியாசமில்லையெனினும் கவிஞன் இயற்கையிலேயே கவிதை கட்டும் சக்தி பெற்றவனாயிருக்கின்றான். இயற்கை அழகிலும் மக்கள் உள்ளத்திலும் கவிஞன் இரண்டறக்கலந்து, துருவி சித்திரம் தீட்டிக்காட்டுகின்றான். மற்றவர்கள் இயற்கை சக்தியிலக்கப்பட்டு மேலெழுந்த வாரியாகச் சுவைக்கிறார்கள். எவ்விடத்தும் கவிஞன் சுதந்திரம் உடையவன் பெரும் பான்மையோருக்குக் கவியாகும் வித்து உண்டு. கவியன் கவிஞனாகப் பிறக்கிறான். ஆனால் அந்த வித்தை எருப்போட்டு, நீர் விட்டு வளர்க்கும் வழிகள் உண்டு. கவிஞன் ஆவதற்கு இலக்கணம் இலக்கியம் ஒன்றும் படிக்க வேண்டாமென்று சிலர் சொல்கிறார்கள். அப்படியல்ல; அவற்றைக் கட்டாயம் படித்துத் தானாக வேண்டும். கவிஞன் ஒரு நாட்டுக்கு என்ன செய்ய முடியுமென்பதைப் பாரதியார் நீரூபித்துக்காட்டி விட்டார். அவரது பாட்டுக்கள் வெளிவந்தது முதல் நாட்டில் தமிழ் வேட்கை அதிகரித்தது. கவிஞன் சரியாக உணர்ந்து சரியாகச் சொல்வான். சாசுவதமான உண்மையைத்தான் சொல்வான். இந்த உண்மைகள் கவிஞனுக்கு முன்னாலே புலப்படுகின்றன. மற்றவர்களுக்குப் பின்னாலே புலப்படுகின்றன. சிலர் தம்மையே புலவரென்று நினைத்துக்கொண்டு திண்டாடுகின்றனர். புதிதாக ஒன்றும் சொல்லத் தெரியாது. முன்னுள்ள கலம்பகம் அந்தாதியைப் பார்த்து வரிசையாக அதையே பாடுகிறது. புதிதாக ஒரு இலக்கியம் செய்யச் செயலில்லை. கல்லாடம் போன்ற நூல்களில் பாக்கியிருப்பதற்கு உறையெழுத முடியாது. எதையாவது மொழி பெயர்க்கிறது. செத்தநூல்களை மொழிபெயர்ப்பது ஒரு புலவனின் வேலையா? சொந்தத்தில் ஒன்றும் வராது. யாராவது புதிதாகப் பாட முற்பட்டால் படிக்கவில்லை, இலக்கணம் தெரியாது என்று குறை சொல்லிக்கொண்டிருப்பது, கையாலாகாத இவருக்குப் பெரிய புராணமும் கம்பராமாயணமும் இல்லாவிட்டால் பேச்சுக்கே இடமில்லை இதை விட்டால் வேறு வழியேது? பட்டங்களைப் பற்றி நீங்கள் மயங்க வேண்டுயதில்லை. சிபார்சு செய்தால் வந்து விடக்கூடியதுதான்."