உள்ளடக்கத்துக்குச் செல்

கவிஞர் பேசுகிறார்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




கவிஞர் பேசுகிறார்

புரட்சிக் கவியரசர் 'பாரதி தாசன்' அவர்களின் சொற்பொழிவுகள்


தொகுப்பாளர்
ன்பு. றுமுகம்


நாவலர் பதிப்பகம்
தெப்பக்குளம் திருச்சி

முதற் பதிப்பு 1947

உரிமை பெற்றது

விலை அணா பத்து






சிட்டி பிரஸ், மதுரை ரோடு, திருச்சினாப்பள்ளி.

Ty. 27C–2000.


           காலம் ஏற்றுநிற்கும் தமிழ்
           வளர்ச்சி - அரசியல் - பொருளியல் --
           சமூக வியல்கள் - தாழ்ந்து மிதியுண்டு
           கிடந்த தமிழ்மகனை, தலை நிமிரவைக்க
           கவிதைச் சங்கநாதம் புரியும்
           “புதுவைக் கவிஞர்”

           பழமைதான் பெரிதென மதித்துப்
           பாழ் இருட்டில் நடந்து கொண்டிருந்த
           மக்களுக்கு ”புரட்சிப் பாதை" காட்டி,
           புதுமைகாண கவிதையிலே - காவியத்திலே
           - கலையிலே - இசையிலே - இலக்கியத்திலே
           மகத்தான மாறுதல் விளைவிப்பவர்
           ”புரட்சிக் கவிஞர்”

           தொழிலாளர் - ஏழையர் - தாழ்த்தப் பட்டோர்
           வாழ்வுயர - இன்பம் மிளிர - காதல் சுரக்க, அழகு
           தமிழில் நகைச்சுவையுடன் கவிதை பாடும் உத்தமர்
           "கவியரசர்

                      கவிஞர்! வாழ்க!

                                                                                        பதிப்பாளர்


                     பாரதியார் பாடல்கள் தமிழ்
                     மக்களின் உள்ளத்தில் சுதந்திர
                     உணர்ச்சியை உண்டுபண்ணினது
                     போல, பாரதிதாசனுடைய பாடல்கள்,
                     சமூக சீர்திருத்த உணர்ச்சியை
                     மக்களுக்கு ஊட்டி வருகின்றன
                     என்றால், அது மிகையாகாது!
                                       கவிஞர் தேசிகவிநாயகம் பிள்ளை

                     கவியரசர் பாரதிதாசன் ஆவேசக்
                     கவி. அவர் (அழகு) அலங்காரக்
                     கவியல்ல. வெறும் ஜோடிப்பு
                     வேலை செய்பவரல்ல. அகராதியைக்
                     கொண்டு கவிகட்டும் மேஸ்திரியல்ல.
                     புன்மைக் கவிதையைக் கொண்டு
                     மனம் பொங்கும் புலவர் அல்ல.
                    ஆவேசத்தையும், உணர்ச்சியையும்
                     வெள்ளமாகக் கொட்டும்
                     "உயிர்க் கவி" பாரதிதான்.
                                              பெரியார் வ.ரா.

                     தமிழ்மக்கள் தாழ்வடைந்துள்ள
                     காரியங்களைப்பற்றிப் பேசும்போது
                     அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும்
                     நெருப்பைக் கக்கிக்கொண்டு வெளி
                     வந்தது. தமிழரின் மேன்மையைப்
                     பற்றி பேசும்போதோ, பெருமிதத்துடன்
                     உள்ளதைக் காட்டிலும், ஒரு சாண்
                     அதிகமாக உயர்ந்து நின்று
                     சிம்மத்தைப்போல கர்ஜித்தார்.
                                                ஆசிரியர் "கல்கி"



உள்ளுறை

"https://ta.wikisource.org/w/index.php?title=கவிஞர்_பேசுகிறார்&oldid=1711382" இலிருந்து மீள்விக்கப்பட்டது