கவிஞர் பேசுகிறார்/இலக்கியம் என்பது என்ன?
Appearance
இலக்கியம் என்பது என்ன?
இலக்கியம் என்பதும் இலக்கணம் என்பதும் இன்ன வென்றே தெரியாமல் இவர்கள் உளறுகிறார்கள். தமிழர்கள் இந்தி எதிர்ப்பில் கொதித்து வாடி சிறைக்குச் சென்ற காலத்தில் இந்தப் பண்டிதர்கள் எங்கே போனார்கள்? அத்தனை தமிழ் மக்களும் எதிர்த்த போது கம்பராமாயண வியாபாரிகள், பிரசங்க பிழைப்புக்காரர்கள், கலை ரசிகர்கள் எத்தனைபேர் சிறைக்குப் போனார்கள்? தமிழன் என்று சொல்லிக்கொண்டு வெற்றியடையும் போது
வந்தீர்கள். தலை தெரியாமல் மறைந்து போனீர்கள்? உங்களைப் போல் புலவர்கள் இருந்தால் தமிழ் எப்படி முன்னேற்ற மடையும்? நீங்கள் மட்டுமா,
இன்னும் உங்களைப் போல் பலர் இருக்கிறார்கள்.
✽✽✽