குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/குழந்தைமை
பயனர்_பேச்சு:Yasercs89
தவறாக விட்டேன் தவறுதலுக்கு மன்னிக்கவும் 07:16, 19 சனவரி 2021 (UTC)
1.சாய்ந்தாடு! | ... | 3 |
2.வா! வா! | ... | 5 |
3.வாய் திற! | ... | 6 |
4.வாடா கண்ணு | ... | 8 |
சாய்ந்தா டம்மா! சாய்ந்தாடு!
தங்கச் சிலையே! சாய்ந்தாடு!
காயும் நிலவே! சாய்ந்தாடு!
கண்ணே ! மணியே! சாய்ந்தாடு!
முத்தம் தருவேன்! சாய்ந்தாடு!
முத்தே! பவளமே! சாய்ந்தாடு!
கொத்தும் கிளியே! சாய்ந்தாடு!
தோகை மயிலே! சாய்ந்தாடு!
பொன்னே! மணியே! சாய்ந்தாடு!
புதுமணப் பூவே! சாய்ந்தாடு!
கன்னற் சுவையே! சாய்ந்தாடு!
காலை அழகே! சாய்ந்தாடு!
அத்தை மகளே! சாய்ந்தாடு!
அழகின் பெருக்கே! சாய்ந்தாடு!
குத்து விளக்கே! சாய்ந்தாடு!
குளிர்ந்த காற்றே! சாய்ந்தாடு!
வானச் சுடரே! சாய்ந்தாடு!
வடித்த தேனே! சாய்ந்தாடு!
காணக் குயிலே! சாய்ந்தாடு!
காட்டுப் புறாவே! சாய்ந்தாடு!5
பாலும் தருவேன்! சாய்ந்தாடு!.
பழமும் தருவேன்! சாய்ந்தாடு!
மேலும் மேலும் சாய்ந்தாடு!
விலையில் மணியே! சாய்ந்தாடு!6
அம்புலி அக்கா வா! வா!
ஆடலாம்! பாடலாம்! வா! வா!
செம்புப் பாலைக் குடிக்கலாம்!
சேர்ந்து சேர்ந்தே ஆடலாம்! 1
பாட்டுப் பாடிக் குதிக்கலாம்!"
பள்ளிக் கோடிப் படிக்கலாம்!
காட்டுப் பூவைப் பறிக்கலாம்!
கட்டி மாலை தெர்டுக்கலாம்! 2
வீடு கட்டிச் சமைக்கலாம்!
வெளியில் திண்ணை அமைக்கலாம்!
ஆடு கோழி வளர்க்கலாம்!
அமியில் சாந்தை அரைக்கலாம்! 3
பொம்மை வைத்தே ஆடலாம்!
புதுப்புது நகைகள் போடலாம்!
அம்மா போல நடைநடந்தே
அங்கும் இங்கும் போகலாம்!4
தம்பி! சோறு! வாய்திற!
தளிரே சோறு! வாய்திற!
கொம்புத் தேனே! வாய்திற
குளத்துப் பூவே! வாய்திற! 1
காலைச் சுடரே! வாய்திற!
கட்டித் தயிரே வாய்திற!
சோலை அழகே! வாய்திற!
குழந்தைப் புலியே! வாய்திற! 2
தங்கக் கட்டி! வாய்திற!
தம்பி! தம்பி! வாய்திற!
சிங்கக் குட்டி! வாய்திற!
சிறுசோ றுண்ண வாய்திற 3
கொக்குக் கேட்கும் வாய்திற!
குருவி கேட்கும்! வாய்திற!
அக்காள் கேட்பார்! வாய்திற!
ஆயா கேட்பார் வாய்திற! 4
அண்ணன் கேட்பார்! வாய்திற!
அம்மா கேட்பார்! வாய்திற!
கிண்ணம் கேட்கும்! வாய்திற!
கிளியே! முத்தே! வாய்திற! 5
வாடா! வாடா! கண்ணு!
வாயில் என்னடா மண்ணு ?
சோறு வாங்கி உண்ணு! 1
அம்மா புடைவை பட்டு!
அழுதால் தலையிற் குட்டு!
அடுப்பில் வேகுது பிட்டு! 2
தம்பி! தம்பி! வாப்பா !
தடுக்கிற் சிரிக்குது பாப்பா !
கதவுக் கிடுவது தாழ்ப்பா! 3
வாடா! வாடா! மூக்கா!
வாங்கலாம் கடையிற் சீக்கா!
மரத்திற் கூவுது காக்கா! 4
தங்கைக்கு மூத்தவள் அக்கா!
தம்பிக்குப் போட்டாள் சொக்கா!
தலைமேற் பறக்குது வக்கா! 5