குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/தங்தை தாய் தந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. தந்தை தாய் தந்தது

"யாரப்பா நீ? - நம்ம சின்ன ராமசாமி மகனா?” என்று கேட்கிறாள் பாட்டி.

"ஆமாம், பாட்டி. எப்படிக் கண்டு பிடிச்சாய்? என்ன நீ பார்த்ததே இல்லையே?" என்று பையன் ஆச்சரியத்தோடு கேட்கிறான். அந்த ஊருக்கு அவன் வந்தது இதுதான் முதல் தடவை. அவன் தந்தை அங்கே அடிக்கடி வருவதுண்டு; ஆனால் அவன் வந்ததில்லை.

"இது தெரியாதா? சின்ன ராமசாமியை வார்த்து வைச்சாப்பிடி இருக்கிறதே. அவனை எனக்கு நல்லாத் தெரியுமே. உன்னைப் பார்த்தால் அவனைப் பார்க்கத் தேவையில்லே" என்று கிழவி பதில் சொல்லுகிறாள். பெற்றொரின் சாயலைக் கொண்டு குழந்தைகளே இவவாறு தெரிந்துகொள்ள முடியும். அவர்களுடைய உடல் தோற்றம் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் அமைவதை நாம் சாதாரணமாக அறிந்திருக்கிரறோம்.

தோற்றத்தில் மட்டுமல்ல குண விசேஷங்களிலும், மனத் திறமைகளிலும்கூட இந்த ஒற்றுமை காணப்படுகிறது. "நூலேப்போல சீலை, தாயைப்போல பிள்ளை" என்றும், "அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது" என்றும் சாதாரணமாக மக்கள் பேசுகிறார்கள். பெற்றோரின் தன்மை பிள்ளைகளுக்கு அமையும் என்பதைப் பொதுவாக அனைவரும் உணர்ந்திருந்தாலும் அவ்வாறு அமைவதற்குக் காரணம் என்ன, அந்த அமைப்பைப்பற்றி ஏதாவது விதிகளுண்டா, அக்த அமைப்பு மாறுபாடடைய

முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்குச் சாஸ்திர முறையாக எடுத்துக்கூற அவர்களுக்குத் தெரியாது. பொதுப்படையாகப் பெற்றோர்களின் உடல் தோற்றத்தையும் உள்ளத் தன்மைகளையும் குழந்தைகளிடம் காணலாகும் என்று அனுபவத்தின் மூலம் அறிந்திருக்கிறோம். நமது நூல்களும் ஆங்காங்கு இதனைக் கூறியுள்ளன. மனத்தத்துவர்கள், உயிர்நூல் வல்லுனர்கள் முதலானவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுள்ள முறைப்படி அவ்வொற்றுமைகளுக்குள்ள காரணத்தை இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.

பெற்றோருக்கும் குழந்தைக்கும் தொடர்பை உண்டாக்குவது ஒரே ஒரு சிறிய உயிரணுதான். ஒரு சிறிய அணுப்போன்ற உயிர். அது இத்தனை ஆச்சரியமான காரியத்தைச் செய்துவிடுகிறது !

ஒரே ஒரு உயிரணு என்றுதானே சொன்னேன் ? அதுதான் பூரித்த அண்டம் (Fertilised Egg) என்பது. அந்தப் பூரித்த அண்டத்திற்குக் காரணமாக இரண்டு அணுக்கள் இருக்கின்றன. ஒன்று தந்தையிடமிருந்து வருவது மற்றென்று தாயினிடத்திலே உண்டாவது. 'பணியிலோர் பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து" என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடுகிறார், ஆமாம்,

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf

தந்தையிடமிருந்து வருகின்ற அணு அத்தனை சிறியது தான் அதற்கு விந்தணு (Sperm Cell) என்று பெயர். புணர்ச்சியின்போது வெளிப்படும் விந்துவிலே லட்சக்கணக்கான விங்தணுக்கள் இருக்கின்றன.

விந்தணுவின் உருவத்தைப் படத்தில் பார்த்தீர்களா? அதற்கு ஒரு வால் இருப்பதைக் கவனியுங்கள். அந்த வாலைச்

சுழற்றிச் சுழற்றி அது முன்னேறிச் செல்லுகிறது. புணர்ச்சியில் வெளிப்பட்ட அத்தனை விங்தனுக்களும் முன்னோக்கிப் புறப்படுகின்றன. ஆனால், ஒன்றுதான் அண்டத்தை (Egg) அடைந்து அதற்குள் புகுவதில் வெற்றியடைகிறது. மற்றவை யெல்லாம் நசித்துப் போகின்றன.

அண்டம் என்பது தாயின் கருப்பையோடு சம்பந்தப்பட்டுள்ள சூல்பை (Ovary) யில் உண்டாகும் ஒரு சிறு

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf

அண்டம்
சுமார் 200 மடங்கு பெரிதாக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது

அணு. இது விந்தணுவைவிட உருவத்திலே சற்றுப் பெரியது. இந்த அண்டத்தை உண்டாக்கும் சூல்பைகள் இரண்டு இருக்கின்றன. புணர்ச்சியின்போது ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கான விந்த்ணுக்கள் வெளிப்படுகின்றன என்று சொன்னேன். ஆனால், அண்டமானது மாதத்திற்கு ஒன்றுதான் உற்பத்தியாகிக் கருப்பையை கோக்கிவரும், இரண்டு சூல் பைகளில் ஒன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு ஒன்றும், மற்றதிலிருந்து அடுத்த மாதத்திற்கு ஒன்றுமாக மாறிமாறி அண்டம் வெளியாகின்றது.

கருப்பையை நோக்கி வந்து கொண்டிருக்கும் அண்டத்தை விந்தணு சந்தித்தால் அதற்குள் பாய்ந்து அதைக்

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf
ஆண் குறி விந்தணு வெளியாகும் வகை

1. விந்தணுச் சுரப்பி 2. விந்து நாளம் 3. விந்துப்பை .
4. சிறுநீர்ப் பை 5. சிறுநீர்ப் புற வழி-விந்தணுச் சுரப்பியில்
உண்டாகி, விந்துப்பையில் சேர்ந்து, சிறுநீர்ப் புற வழியின்மூலம் விந்தணு வெளிப் படுகிறது.

கருவாக மாறச் செய்கிறது. அப்படிச் சந்திக்காவிடில் அவ்வண்டம் பயனற்று அழிந்து விடுகிறது.

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf
பெண் குறி:அண்டம் தோன்றுதல்

1. யோனி. 2. கருப்பை. 3. கருமூலக் குழாய். 4. அண்டம். 5. சூல்பை.
கருமூலக் குழாய் வழியாக அண்டம் கருப்பையைச் சேர்கிறது.

அண்டத்திற்குள் பாயும்போது விந்தணுவின் வால் அறுந்துபோகும். தலைமட்டும் உள்ளே செல்லும். இவ்வாறு விந்தணுப் பாய்ந்து கருவாக மாறிய அண்டத்தைத்தான் நான் முன்பு பூரித்த அண்டம் என்று குறிப்பிட்டேன்.

பூரித்த அண்டம் உடனே ஒன்று இரண்டாகவும், இரண்டு நான்காகவும் நான்கு எட்டாகவும் இப்படி இரட்டித்துப் பிரிந்து பெருகி ஒரு பிழம்பாகத் திரண்டு வந்து கருப்பையில் ஏதாவது ஓர் இடத்தில் ஒட்டிக்கொண்டு வளர ஆரம்பிக்கிறது. கருப்பையின் உட்புறச் சுவரில் ஒட்டிக் கொண்டது முதல் அது தாயின் உடம்பிலிருந்தே போஷணையை எடுத்துக்கொண்டு வளர்ந்து ஒன்பது மாதத்தில் அற்புதமான குழந்தையாக உருவெடுக்கிறது.

குழந்தையின் தோற்றத்திற்குக் காரணமான பூரித்த அண்டத்தைப் பற்றியும் அப்பூரித்த அண்டத்திற்குக் காரணமான விந்தணுவைப் பற்றியும் அண்டத்தைப் பற்றியும் சுருக்கமாகக் கூறினேன். (இதைப்பற்றி, கருவில் வளரும் குழந்தை என்ற நூலில் விரிவாக

விளக்கியிருக்கிறேன். அதிலிருந்து பெற்றோர்களின் உடற்கட்டோ தன்மைகளோ குழந்தைக்கு உண்டாக வேண்டுமானால் தங்தையிடமிருந்து வந்த விந்தணுவும், தாயிடத்துத் தோன்றிய அண்டமுந்தான் காரணமாக இருக்கவேண்டுமென அறிந்து கொள்ளலாம்.

ஆதலால் அவையிரண்டையும் கூர்ந்து சோதனை செய்து பார்த்தால் பாரம்பரியமாக வரும் தன்மைகளின் இரகசியம் வெளிப்பட்டுப் போகும்.

விந்தணுவும் அண்டமும் உருவத்தில் மிகச் சிறியவை என்று கண்டோம். ஆதலால் அவற்றைத் துருவிப் பார்ப்பதற்கு மிகச் சக்திவாய்ந்த பூதக் கண்ணாடிகள் வேண்டும். அதனால் அத்தகைய பூதக் கண்ணாடிகள் செய்யப்பட்ட பிறகே இவ்வாராய்ச்சியைச் செய்ய முடிந்தது.

விந்தணுவையும், அண்டத்தையும் பூதக் கண்ணாடி மூலம் நோக்கினால் அவற்றில் தனித்தனி 24 ஜோடிக் கணுக்கோல்கள் (Chromosomes) இருப்பது தெரியவரும். ரப்பரிலே மிக மெல்லியதான நாரிழுத்து அதைச் சிறு சிறு துண்டங்களாகச் செய்தால் எப்படியிருக்குமோ அவ்வாறு இந்தக் கணுக்கோல்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு ஜோடியும் ஒரே மாதிரி உருவமுடையது. ஆனால், ஜோடிக்கு ஜோடி வேறுபாடு உண்டு. விந்தணுவிலுள்ள ஒரு ஜோடியைப் போலவே உருவமுள்ள ஒரு ஜோடி அண்டத்திலுமிருக்கும். இம்மாதிரி விந்தணுவிலுள்ள 24 ஜோடிகளுக்கும் உருவத்தில் ஒப்பான 24 ஜோடிகள் அண்டத்தில் உண்டு. விந்தணுவிலுள்ள ஒரு ஜோடி மட்டும் உருவத்திலே மாறுபட்டிருக்கும். அந்த மாறுபட்ட ஜோடிதான் குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும் பெண்ணாகப் பிறப்பதற்கும் காரணமாம். நாம் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி அதுவல்லவாகையால் அதைப்பற்றி இங்கு விரித்துக் கூறாமல் மேலே செல்லுகிறேன்.

விந்தணுவிலும், அண்டத்திலும் 24 ஜோடிக் கணுக்கோல்கள் இருக்கின்றன என்று சொன்னேன். இவை முதிர்ச்சியடையும்போது
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf

இரண்டிரண்டாகப் பிரிந்து ஒவ்வொன்றிலும் 24 கணுக் கோல்கள்தான் இருக்கும். ஆகவே, கருவுண்டாவதற்குக் காரணமான முதிர்ந்த விந்தணுவிலும் அண்டத்திலும் தனித்தனி 24 கணுக்கோல்கள் இருக்கும். அந்த விந்தணு அண்டத்துள் பாய்ந்து அண்டம் பூரிக்கும்போது பழையபடி அதில் 24 ஜோடிகளாய் விடுகின்றன.

இங்குள்ள படத்திலே, முதிர்ந்த விந்தணுவிலும் அண்டத்திலும் ஒரேமாதிரி உருவமுள்ள மூன்று கணுக்கோல்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. தெளிவாகத் தெரியும்பொருட்டு 24-யும் வரையவில்லை. இவ்வாறே மற்றவையும் வேறு வேறு வடிவங்களில் இருக்குமென்று மட்டும் ஊகித்துக்கொள்ள வேண்டும். விந்தணுப் பாய்ந்து அண்டம் பூரிப்பதைக் கீழ்க்கண்ட படம் விளக்குகிறது.

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf

அண்டத்திற்குள் விந்தனுப் பாய்ந்தபின் 24 ஜோடிக் கணுக்கோல்கள் ஆவதை விளக்கும் படம். தெளிவு பற்றி 3 ஜோடிகள் மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளன.

பூரித்த அண்டத்திலுள்ள ஜோடியான மூன்று கணுக் கோல்கள் படத்தில் தெரிகின்றன. இவ்வாறு 24 ஜோடிகள் இருக்கும். பூரித்த அண்டம் இரண்டிரண்டாகப் பிரிந்து பெருகுமென முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அப்படிப் பெருகும்போது ஒவ்வொரு பிரிவிலும் 24 ஜோடிக் கணுக்கோல்கள் இருக்கும்படியாக அவையும் இரட்டித்துப் பெருகும்.

பூரித்த அண்டம் பெருகிக் குழந்தையாக வடிவெடுப்பதை விட்டுவிட்டுக் கணுக்கோல் ஒவ்வொன்றையும் இன்னும் நுட்பமாகத் துருவிப் பார்ப்போம். மிக மிகச் சக்திவாய்ந்த பூதக் கண்ணாடியால் ஆராய்ந்தால் கணுக்கோல்களிலே ஆயிரக்கணக்கான மிக நுட்பமான பாகங்கள் இருப்பதைக் காணலாம். அந்தப் பாகங்களின் திரளே கணுக்கோல். அவைகளுக்கு ஜீனுக்கள் (Genes) என்று பெயர். நமது ஆராய்ச்சி நுட்பமாகப் போய்க் கொண்டேயிருக்கிறதல்லவா? பூரித்த அண்டத்திலே தொடங்கினோம். அதிலிருந்து விந்தணுவிற்கும் அண்டத்திற்கும் வந்து, அவற்றிலிருந்து கனுக்கோல்களுக்கு மாறி, அதிலிருந்து இப்பொழுது ஜீனுக்கு வந்திருக்கிறோம்.

இந்த ஜீனுவிலேதான் ஒவ்வொரு தன்மைக்குமான இரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறதாம். ஏதாவது ஒரு தன்மைக்கென ஒரு ஜீனு இருக்கலாம், அல்லது பல அணுக்கள் இருக்கலாம். அவைகள் பல்வேறுவிதமாகக் கூடிப் பிரிந்து குழந்தையின் பாரம்பரியத்தை நிர்ணயம் செய்கின்றன.

குழந்தையாக மாறும் பூரித்த அண்டத்திலுள்ள கனுக்கோல்களில் ஜோடிக்கு ஒன்றாக 24 கணுக்கோல்கள் தந்தையிடத்திலிருந்து வந்ததென்றும், மற்ற 24 தாயிடத்திலிருந்து கிடைத்தவையென்றும் முன்பே அறிவோம். அந்தப் பூரித்த அண்டம் பிரியும்போது ஏற்படும் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் இதுபோன்ற 24 ஜோடிக் கணுக்கோல்களே இருக்கும். அதாவது ஒவ்வொரு ஜோடியிலுமுள்ள ஒரு கணுக்கோல் தந்தை வழியிலும் மற்ருென்று தாய் வழியிலும் வந்ததாகும்.

இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பார்த்தால் தந்தையின் விந்தணுவிலுள்ள 24 ஜோடிக் கணுக்கோல்களில் ஜோடிக்கொன்றாய் 24 அவருடைய தந்தையிடத்திருந்தும் மற்ற 24 அவருடைய தாயிடத்திருந்தும் வந்தவை என்பது தெளிவாகும். அதேபோல வந்தவையே அண்டத்திலுள்ள கணுக்கோல்களும். இப்படியாக வந்துள்ள 24 ஜோடிக் கணுக்கோல்கள் விந்தணுவோ அல்லது அண்டமோ முதிர்ச்சியடையும்போது ஜோடிக்கொன்ருய்ப் பிரிந்து முதிர்ந்ததில் 24 கனுக்கோல்களே இருக்குமென முன்பு பார்த்தோம். இவ்வாறு பிரிகின்ற அந்த ஜோடிகள் சும்மா பேசாமல் பிரிந்து விடுவதில்லை. தாங்கள் ஒன்றாக இருந்த நட்பின் காரணமாக ஒவ்வொரு ஜோடியும் ஒன்றையொன்று கட்டித் தழுவிக்கொண்டு பிறகு பிரிகின்றன. அப்படித் தழுவும்போது ஒன்றின் மேல் பாகமோ கீழ்ப் பாகமோ அல்லது மத்திய டாகமோ அல்லது வேறு பாகமோ பல சமயங்களில் அறுபட்டு மாறி ஒட்டிக் கொள்ளுகிறது. கணுக்கோல்களின் உருவம் பழையபடியே இருந்தாலும் அவற்றின் ஜீனுக்களில் மாறுதல் ஏற்பட்டு விடுகிறது. இது மிக முக்கியமான விஷயம். இப்படி ஏற்பட்ட மாறுதல்களாலே பாரம்பரியத் தன்மைகள் பலவாறு மாறுபட்டு அமைகின்றன. அவைகளே ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் உருவ அமைப்பு வேறுபாட்டிற்கும் முக்கியக் காரணமாகின்றன. கணுக்கோல்களின் தழுவலாலே ஜீனுக்கள் எவ்வாறு மாறுபட்டு அமைகின்றன என்பதும், அவை எவ்வாறு குழந்தையின் தன்மையில் வேறுபாடு விளைவிக்கின்றன என்பதும் இன்னும் ஆச்சரியமான விஷ்யங்கள். அவற்றையும் இங்கே விவரிப்பதென்றால் இப்பகுதி மிகப் பெரிதாகிச் சுவை குன்றிவிடும். ஆகவே, இத்துடன் கிறுத்திக் கொள்ளுகிறேன். அதற்கு மேலே சூழ்நிலையின் சக்தியைப் பற்றிப் பெரிய விஷயமும் இருக்கிறது. (இவற்றைப்பற்றி யெல்லாம் விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமானல், பாரம்பரியம் என்ற எனது நூலைப் பார்க்க.)

குழந்தைக்கு அமைந்த உருவத் தோற்றமும் தன்மைகளும் பெரியதோர் அளவிற்குத் தாய் தந்தையர் தந்தவை யென்றும், அவற்றிற்குக் காரணமாக இருந்தவை முக்கிய மாகக் கணுக்கோல்களிலுள்ள ஜீனுக்கள் என்றும் இது வரை கூறியவற்றால் அறிந்துகொள்ள இயலுமானால் அதுவே நான் கொண்ட நோக்கம் நிறைவேறியதற்கு அடையாளமாகும். குழந்தையை நன்கு வளர்ப்பதற்கு இந்த உண்மையும் தெரிந்திருக்க வேண்டும்.