கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/அஞ்சலோட்டம்

விக்கிமூலம் இலிருந்து

98. அஞ்சலோட்டம்

முன் ஆட்டம் போலவே, குழுக்கள் வரிசையாக நிற்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு ஓடும் பாதை (Track) இருந்தால் நல்லது. அவ்வாறு இல்லாவிடில், ஒட்டக்காரர்களை நேராக ஓடுமாறு அறிவுறுத்த வேண்டும்.

ஒடுங்கள் என்று ஆணையிட்டவுடன், முதலாட்டக்காரர் முன்னே குறித்திருக்கும். முடிவெல் லைக் கோட்டைக் கடந்து, அங்கிருந்து மீண்டும் ஓடிவந்து அடுத்து நிற்கும் ஆட்டக்காரரைத் தொட்டு அனுப்பிவிட்டு, குழுவின் பின்புறமாகச் சென்று நின்றுகொள்ள வேண்டும்.

அனைவரும் ஓடிச் செல்லும் வாய்ப்புப் பெற்று ஓடி முடித்து, முன்னுக்கு ஓடி வருகின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: தன் பாங்கர் (Team mate) தன்னைத் தொடுவதற்கு முன் யாரும் ஓடத் தொடங்கவே கூடாது. அத்துடன், ஆரம்பக் கோட்டைக் கடந்து நிற்கவும் கூடாது.

வேறு முறை. இது போன்ற அஞ்சலோட்டப் போட்டிகளில், முதலாமவர் முன்புறமாகவே ஓடி வழக்கம்போல் ஓடி வருதல், இரண்டாமவர் முன்புறம் பார்த்து ஓடி, திரும்பும் போது பின்புறமாகவே ஓடிவருதல், மூன்றாமவர் தாண்டித் தாண்டி ஓடுதல் (Hop) நான்காமவர் நொண்டியடித்து ஓடுதல் என்று வைத்துக் கொண்டும் போட்டியை நடத்தி மகிழலாம்.