கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/புனலாட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

99. புனலாட்டம்

முன் ஆட்டம் போலவே, குழுக்கள் வரிசையாக நிற்க வேண்டும். அந்தந்தக் குழுவிற்கு நேராக, 30 கெச தூரத்திற்கு இருவட்டங்கள் போடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வட்டத்திற்குள்ளும் ஒவ்வொரு வாளி வைக்கப்பட்டிருக்கும். ஒரு வாளி நிறைய தண்ணிரும், மற்றொரு வாளி காலியாகவும் இருக்க வேண்டும்.

முதலாட்டக்காரர் ஓடி வந்து, காலியான வாளியில் தண்ணிருள்ள வாளியிலிருந்துதண்ணிரை ஊற்றி நிரப்பி விட்டுத் தன் குழுவிற்கு வந்து, அடுத்தவரைத் தொட்டு விட்டு, குழுவின் பின்புறம் சென்று நின்று கொள்ளவேண்டும்.

அடுத்தவர் சென்று அதேபோல், காலி வாளிக்குள் தண்ணிரை நிரப்பிவிட்டுவரவேண்டும்.

இவ்வாறு நீரை வாளிகளில் மாற்றி மாற்றி, முன்னால் ஓடி முடித்த குழுவே வெற்றி பெறும்.

குறிப்பு: தண்ணிரை சிந்தி அதிகம் வீணாக்கக் கூடாது. முதலில் வாளியில் இருந்த தண்ணிரைவிட, ஆட்டக் கடைசியில் 2 அங்குல அளவு தண்ணிர் வாளியில் குறைந்திருக்கலாம். அதற்கும் குறைந்துபோய், ஆட்டத்தில் முதலாவதாக வந்தாலும் வெற்றிபெற முடியாது விழிப்புடனும் பொறுப்புடனும் விளையாடினால்தான் வெற்றிபெற முடியும்.