கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/அலையோட்டம்

விக்கிமூலம் இலிருந்து

90. அலையோட்டம்


குழுவுக்கு 6 பேர் என்று ஆட்டக்காரர்களைப் பிரித்துக் கொள்ளலாம். (இட வசதிக்கேற்பவும், ஆடும் திறமைக் கேற்பவும் எண்ணிக்கை மாறலாம்).

ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால், போட்டியைத் தொடங்க, குழுக்களை வரிசையாக (File) நிற்கச் செய்ய வேண்டும்.

முடிவெல்லைக் கோட்டை 20 அடிக்கு அப்பால் குறித்திருக்க வேண்டும்.

விசில் ஒலிக்குப் பிறகு, தயாராக நிற்கும் முதலாட்டக்காரர் அனைவரும் முடிவெல்லைக் கோடுவரை ஓடி, கோட்டைத் தொட்டுக் கடந்து, பின் அப்படியே திரும்பி ஓடிவராமல், பின் பக்கமாகவே ஓடி வரவேண்டும்.

ஓடி வந்து தன் இடத்தில் நின்று விடாமல், 2-ம் ஒட்டக் காரரின் தோல்மேல் கை போட்டுத் தன்னுடன் இடப்பக்கமாக இணைத்துக் கொண்டு மீண்டும் முடிவெல்லைக் கோட்டை நோக்கி முன் பக்கமாக ஓடி, வரும் பொழுது பின் பக்கமாகவே இருவரும் ஓடி வரவேண்டும்.

வந்த இரட்டையர், மூன்றாம் ஒட்டக்காரரை வலப்பக்கம் இணைத்துக்கொண்டு ஓடிச் சென்று மீண்டும் திரும்பி வர வேண்டும்.

இவ்வாறாக 6 பேரும் ஒருவர் தோள்மேல் ஒருவராக கைகளைப் போட்டுக்கொண்டு, எல்லைவரை ஓடி, பின்னாலேயே ஓடி வரவேண்டும்.

கீழே விழுந்துவிட்டாலும் கைகள் இணைப்பை இழந்து விட்டாலும் முதலில் ஓடிவருகின்ற குழு வெற்றி வாய்ப்பை இழக்கும்.

உறுதியான பிணைப்புடன், முதலில் வருகின்ற குழுவே வெற்றி பெறுகிறது.