கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/உட்காரத் தெரியுமா?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

64. உட்காரத் தெரியுமா?

ஆதிகால மக்களுக்கு படுக்க வேண்டுமென்றால், அப்படியே திடீரென்று தரையில் விழுந்து விடுவார்கள் என்றும், அவர்களுக்கு உடலை வளைத்து உட்காரத் தெரியாது என்றும் கூறுவார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதே போலவேதான் உட்காரத் தெரியுமா என்ற விளையாட்டும்.

வகுப்பில் எல்லோரும் நின்று கொண்டிருக்க வேண்டும், புறப்படுங்கள் என்று சொன்னவுடன், எல்லோரும் நான்கு சுவர்களைச் சுற்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

தாமதமாக உட்காருபவரும், எல்லோருக்கும் கடைசியாக உட்காருபவரும் ஆட்டமிழந்து விடுவார்கள். மீண்டும் அதுபோலவே நடக்க வைத்து, விசில் ஒலி எழுப்பி உட்கார வைத்து, இறுதிவரை ஆடச் செய்து வெற்றி வீரரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விசில் சத்தத்திற்குப் பதிலாக, இசைத் தட்டைக்கூட இந்த ஆட்டத்திற்குப் பயன்படுத்தலாம்.