உள்ளடக்கத்துக்குச் செல்

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/எங்கே பந்து?

விக்கிமூலம் இலிருந்து

63. எங்கே பந்து?


ஒரு மேசை மேல் பந்து ஒன்றை வைக்கவேண்டும். மேசை எங்கே இருக்கிறது. பந்து எங்கே இருக்கிறது. என்பதை முதலில் பார்த்துக் கொள்ளச் செய்து, அந்த மாணவரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து கைக்குட்டை ஒன்றால், கண்களைக் கட்டி மறைத்துவிட வேண்டும்.

வாசலில் வந்து அவரை விட்டபின், பந்தை எடுக்குமாறு கூற வேண்டும். அதற்குரிய நேரம் 2 நிமிடங்களே.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தை எடுத்து விடுகின்றவருக்கு ஒரு வெற்றி எண் உண்டு.

மாணவர்களை நான்கு குழுவாகப் பிரித்து எந்தக் குழு மாணவர்கள் அதிக முறை எடுத்து அதிக வெற்றி எண்களைப் பெறுகின்றார்களோ அந்தக் குழுவே வெற்றி பெற்றக் குழு என்று அறிவிக்க வேண்டும்.