கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/சொல் பார்க்கலாம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

62. சொல் பார்க்கலாம்

அவரவருக்குரிய இடங்களில் அனைவரும் உட்கார வேண்டும். ஆசிரியர் அவர்களுக்கு முன்னே அமர்ந்திருக்க வேண்டும்.

ஆசிரியரின் கேள்விக்கு இப்பொழுது மாணவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அவர் ஒருவரை அழைத்து நிற்கச் செய்து, நிலத்தில் வாழும் ஒரு மிருகத்தின் பெயரைச் சொல் என்பார்.

அதேபோல் மாறி மாறி கேள்விகளை மற்றவர்களிடமும் கேட்க வேண்டும்.

அவர் 1, 2, என்று எண்ணி 10 வருவதற்குள், மாணவர்கள் பதிலைச் சொல்லிவிட வேண்டும்.

பதிலைச்சொல்லி விடுகிறவர் மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார். சொல்ல இயலாதவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

ஒருவர் சொன்ன பதிலையே இன்னொருவர் சொல்லக் கூடாது. ஆட்ட இறுதிவரை இருப்பவரே, வெற்றி பெற்றவராவார்.