கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கூடைக்குள்ளே கோலிக்குண்டு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

61. கூடைக்குள்ளே கோலிக்குண்டு

ஒரு பிளாஸ்டிக் கூடையும், பத்து கோலிக் குண்டுகளும், இந்த விளையாட்டுக்குத் தேவையான பொருட்களாகும்.

அந்தக் கூடையை ஒரு இடத்தில் வைத்து, அதிலிருந்து 10 அடி தூரத்திற்கு அப்பால் ஒரு கோடு கிழித்து இடத்தைக் குறிப்பிடவும்.

ஒவ்வொருவரும் வந்து, 10 கோலிக் குண்டுகளை அந்தக் கூடைக்குள்ளே எறிய வேண்டும்.

அதிகமுறை கோலிக் குண்டுகளை அந்தக் கூடைக்குள் எறிந்தவரே ஆட்டத்தில் வெற்றி பெற்றவராவார்.