கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/எங்கே உருட்டு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

20. எங்கே உருட்டு

அமைப்பு:

வட்டமாக எல்லோரும் நிற்க வேண்டும். ஆனால், இந்த ஆட்டத்தில் சிறிது மாற்றம் உண்டு. எல்லோரும் கால்களை அகலமாக விரித்து வைத்தவாறு நிற்க வேண்டும்.

வட்டத்தின் மத்தியிலே ஒருவர் பந்துடன் வந்து நிற்க வேண்டும்.

ஆடும் முறை:

வட்டத்தினுள் நிற்பவர், தன்கையிலுள்ள பந்தை, அவர் விரும்பும் திசையில், எந்தப் பக்கமாக இருந்தாலும் சரி, எந்த ஆளாகயிருந்தாலும் சரி, விரித்து வைக்கப்பட்டிருக்கும் கால்களுக்கிடையே பந்தை உருட்டி வெளியே விட்டுவிட வேண்டும்.

விரித்து வைக்கப்பட்டிருக்கும் தன் கால்களுக்கிடையே பந்து போகாமல் இருக்க, கைகளினால் மட்டுமே குனிந்தவாறு தடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை, வட்டத்தில் நிற்பவருக்கு உண்டு, ஆனால் பந்தைப் பிடிக்கவோ, கால்களால் உதைக்கவோ கூடாது. இவ்வாறு கைகளால் தடுத்தும், கால்களுக்கிடையில் பந்து போய்விட்டால், உருட்டி விட்டவருக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

குறிப்பு: ஒவ்வொருவருக்கும் நடுவில் நின்று 10 முறை பந்தை உருட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. அவற்றில் யார் அதிக வெற்றி எண் பெறுகின்றாரோ, அவரே வெற்றி பெற்றவராவார்.