கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/எந்தப் பக்கம்?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

58. எந்தப் பக்கம்?

மாணவர்களை முதலில் எழுந்து நிற்கச் செய்து, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எந்தெந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதை ஆசிரியர் விளக்கிக் கூறவேண்டும்.

அடுத்து, மாணவர்களைத் தயாரா என்று கேட்டு, இந்த விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

ஆசிரியர் ‘தெற்கு’ என்று சொன்னவுடன், எல்லோரும் தாண்டிக் குதித்துத் தெற்குப் பக்கம் திரும்பி நிற்க வேண்டும்.

தெற்கு திசையைப் புரிந்துகொள்ளாமல், வேறு திசைப் பக்கம் திரும்பி நிற்பவர்கள் அனைவரும், ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.

திசையைச் சொன்ன உடனேயே, திடீரெனத் திரும்பிக் குதிக்க வேண்டும். தாமதமாக யோசித்துத் திரும்புவதும், அடுத்தவர் திரும்புவதைப் பார்த்துவிட்டுத் தாம் திரும்புவதும் தவறான ஆட்டமாகும். அவர்களும் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்கள் தான்.

இவ்வாறு, குறிப்பிட்ட திசைப் பக்கம் சரியாகக் குதித்து இறுதிவரை யார் ஆட்டத்தில் நிற்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.