கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/என்ன சத்தம்?

விக்கிமூலம் இலிருந்து

59. என்ன சத்தம்?


வகுப்பறையின் ஒரு மூலையில் (55-வது ஆட்டத்தைப் போலவே) திரைச்சீலை ஒன்றை முதலில் கட்டி வைத்திருக்க வேண்டும்.

அந்தத் திரைச் சீலையின் உட்புறம் சென்று, ஆசிரியர் பலவித சத்தங்களை உண்டு பண்ண வேண்டும்.

சத்தத்தைக் கேட்டு, சரியாகச் சொல் பவர் ஆட்டத்தில் இருக்கலாம், தவறாகச் சொல்பவர் ஆட்டமிழந்து, தனியே உட்கார வேண்டும்.

பலமுறை தொடர்ந்து வரும் சோதனைகளில், சரியான சத்தத்தை அறிந்து சொல்பவரே, ஆட்டத்தில் வெற்றி பெற்றவராவார்.

ஆசிரியர் தமக்குரிய திறமைக்கேற்ப பல சப்த ஒலிகளை எழுப்பலாம். சத்தத்திற்கு சில உதாரணங்கள்; நாணயத்தைக் கீழே போடுதல், பென்சிலைத் தரையில் தீட்டுதல், புத்தகத்தை நழுவ விடுதல், நாற்காலியை நகர்த்துதல், காகிதத்தை கிழித்தல், சீட்டுக் கட்டு கலைத்தல்.