கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கை இழுக்கும் போட்டி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

IV. போட்டி விளையாட்டுக்கள்


71. கை இழுக்கும் போட்டி

இருக்கும் ஆட்டக்காரர்கள் அனைவரையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு ஆளைக் குழுத் தளபதியாக நியமிக்க வேண்டும்.

நடுக்கோடு ஒன்றும், அதற்கு இணையாக இருபுறமும் 3 அடித் தூரத்தில் இரண்டு இணைக் கோடுகளும் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எதிரெதிரே இரண்டு குழுவினரும் நிற்கவேண்டும். முன்னால் நிற்கும் தளபதியை அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒருவர் இடுப்பில் இரு கைகளையும் கோர்த்தபடி சங்கிலி இணைந்திருப்பதுபோல், தொடர்ந்து அவர் பின்னால் நிற்பவர்களும் அதே முறையைப் பின்பற்றிப் பிடித்திருக்க வேண்டும்.

இப்பொழுது தங்களுக்குப் பின்னால் தங்கள் குழுவை இணைத்திருக்கும் குழுத்தளபதிகள் இருவரும், ஒருவருக் கொருவர் கைகளைப் பிடித்துக் கோர்த்துக்கொண்டு, போட்டிக்குரிய தயார் நிலையில் நிற்க வேண்டும்.

போட்டி ஆரம்பமானதும், இரு குழுக்களும் இழுக்கத் தொடங்க வேண்டும். குறிப்பிட்ட அந்த எல்லையைக் கடந்து தங்கள் பகுதியில் உள்ள இணைக் கோட்டிற்கு அப்பால், எதிர்க் குழுவை இழுத்து வந்துவிட்ட குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு:

குழுவினர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தங்களுக்குள் இருக்கின்ற சங்கிலிப் பிணைப்பையும் தொடர்பையும் விட்டுவிடக்கூடாது. இரண்டு முறை இழுக்கும் போட்டியில் வெற்றிபெற வேண்டும்.