கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/எனக்கொரு பந்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

70. எனக்கொரு பந்து


மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்கச் செய்திருக்க வேண்டும்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஒன்று குறைந்திருப்பது போல பந்துகள் வகுப்பறையின் ஒரு மூலையில் வைத்திருக்க வேண்டும். (அதாவது 20 பேர் என்றால் 19 சிறிய பந்துகள்)

உள்ளேயிருந்து ஆசிரியர் அல்லது தலைவர் சைகை கிடைத்தவுடன் எல்லோரும் ஓடி ஆளுக்கொரு பந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பந்து கிடைக்காதவர் ஆட்டமிழந்து விடுகின்றார். ஆள் குறையக் குறையப் பந்தும் ஒன்று ஒன்றாகக் குறைந்து கொண்டே வரவேண்டும்.

கடைசியாக ஒருவர் இருக்கும்வரை ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

இறுதியாக உள்ளவரே வெற்றி வீரராகின்றார்.

தனித்தனியாகவும் இணைந்தும் ஆடி மகிழ்ந்ததைப் போலவே, இனிவரும் விளையாட்டுக்களனைத்தும், கூடி விளையாடவும், அத்துடன் போட்டியிட்டுக் களிக்கவும் ஏற்ற நிலையிலே தரப்பட்டிருக்கின்றன.

ஆர்வமுடன் கலந்து கொண்டு, ஆரவாரம் நிறைந்த போட்டியில் ஈடுபட்டு, ஆனந்தம் பெற வேண்டும் என்ற நோக்கம் விளையாடுவோரின் தரத்திலும் திறத்திலுமே இருக்கிறது என்பதை உணர்ந்து ஆட வேண்டும்.