உள்ளடக்கத்துக்குச் செல்

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கொக்காட்டம்

விக்கிமூலம் இலிருந்து

25. கொக்காட்டம்

அமைப்பு:

20, 21-வது விளையாட்டுக்களைப் போலவேதான். இந்த விளையாட்டும்; முன்னர் விளக்கியிருந்த ஆட்டங்களில் போதிய பயிற்சியும் அனுபவமும் பெற்ற பிறகே, இந்த விளையாட்டை விளையாடினால் சிறப்பாக அமையும். ஆடுவதற்கு ஆனந்தமாகவும். கவர்ச்சி யாகவும் இருக்கும்.

ஆடும் முறை:

இப்படி நிற்பது, மீனுக்காக ஏங்கி, கொக்கு தவம் செய்வதுபோல இருக்கும்.

இவ்வாறு வேகமாக ஓடிவந்து, திடீரென்று மேற் கூறியவாறு நிற்கின்றவரே தொடுவதிலிருந்து தப்பித்துக் கொள்வார். காலுக்கிடையில் கை நுழைத்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்கும்பொழுது. சமநிலை (Balance) கிடைக்காமல் ஆடலாம். தள்ளாடலாம். ஆனால் கையை மூக்கைவிட்டு எடுப்பதோ, மற்றும் வலது காலை கீழே ஊன்றுவதோ கூடாது.

அவ்வாறு நடந்துவிட்டால், அவர் தொடப்பட்டு, அதன் மூலம் அவர் தொடுகின்ற ஆட்டக்காரராக மாறிவிடுவார்.

குறிப்பு:

இதேபோல், தரையில் படுத்துக்கொள்ளுதல், மரத்தில் ஏறி கிளையில் தொங்குதல், சிலைபோல் அசையாமல் நிற்றல், அல்லது ஒரு மிருகத்தைப்போல் பாவனைசெய்தல் போன்ற முறைகளைக் கொண்டும் ஆடி மகிழலாம்.