கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/சுற்றி வா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

84. சுற்றி வா


ஒவ்வொரு குழுவும் வரிசையாக, ஒருவர் பின் ஒருவராக நிற்கவேண்டும். 81வது ஆட்டத்தைப் போல, எதிரெதிர்ப் புறமாக குழுக்கள் நிற்க வேண்டும்.

சுற்றி வரும் போட்டி ஆரம்பமானதும், குழுவில் முதலாட்டக்காரர் இடது புறம் திரும்பி ஓடத்தொடங்கி, தன் குழுவையே ஒரு சுற்று சுற்றி வந்து தன் இடத்தில் நின்றுகொள்ள வேண்டும்.

அவர் வந்து நின்று தன்னை தொட்டபிறகே, அடுத்தவர் முதலாம் ஆட்டக்காரர் போல குழுவைச் சுற்றி, முதலாம் ஆட்டக்காரரையும் சுற்றிவிட்டுத் தன் இடத்திற்கு வந்து மூன்றாமவரைத் தொட்டுவிட்டு நிற்க வேண்டும்.

இவ்வாறு, முன்னால் விளக்கிய முறையில், எந்தக் குழுவினர் தங்களை ஒரு முறை விரைவாகச் சுற்றிக் கொண்டு முதலாவதாக வந்து நிற்கிறார்களோ, அக்குழுவினரே வெற்றி பெறுகிறார்கள்.