கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நீளத் தாண்டும் போட்டி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

83. நீளத் தாண்டும் போட்டி

நான்கு சம எண்ணிக்கையுள்ளதாக பிரிந்த குழுக்கள் ஓடத் தொடங்கும் கோட்டின் முன்னே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இப்பொழுது, தாண்டும் போட்டியைத் தொடங்க வேண்டும்.

ஒரு குழுவின் முதலாள், முன்னுள்ள கோட்டின் பின்னால் நின்று, நின்ற வண்ணமே துள்ளி, முன்புறமாகத் தாண்டி, இரு கால்களையும் ஊன்றி நிற்க வேண்டும். கால்களை ஊன்றிய இடத்திலிருந்து இரண்டாமவர் முன்னர் போல் துள்ளித் தாண்டி குதித்து நிற்கவேண்டும்.

இவ்வாறு குழுவில் உள்ளவர்கள் அனைவரும் குதித்துத் தாண்டிய மொத்த தூரத்தைக் கணக்கிட்டு அளக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவாக, நான்கு குழுவினர்கள் தாண்டிய தூரத்தை தனித்தனியே அளந்த பிறகு, அதிக தூரம் தாண்டியிருக்கின்ற குழுவே வெற்றி பெற்றதென்று அறிவிக்க வேண்டும்.