கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/தொடாதே!

விக்கிமூலம் இலிருந்து

68. தொடாதே!

வகுப்பறைக்குள் மாணவர்கள் எழுந்து, தயாராக நிற்க வேண்டும்.

‘புறப்படுங்கள்’ என்று சொன்னவுடன், அனை வரும் சுவர் ஓரமாகவே நடந்து வகுப்பறையைச் சுற்றி வரவேண்டும்.

அவ்வாறு சுற்றி வந்து கொண்டிருக்கும்பொழுதே, சுவற்றையோ, சன்னலையோ, கதவையோ முன்னால் செல்பவரையோ அல்லது பின்னுக்கு வருபவரையோ தொடவே கூடாது.

அவ்வாறு தொடுகின்றவர்கள் ஆட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பை இழந்து, வெளியேற்றப்படு கின்றார்கள்.

குறிப்பு:

ஆரம்பத்தில் எதையும் தொடாமலே செல்ல முடியும். ஆனால், போகப்போக, நேரம் செல்லச் செல்ல எதையும் தொடாமல், போவது என்பது முடியாத காரியம், தொட்டுக்கொண்டு நடப்பதுதான் மனித சுபாவம்.

ஆகவே, இந்த விளையாட்டு மிகவும் சுவையாக இருக்கும்.