கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நண்டு ஓட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

78. நண்டு ஓட்டம்

ஆட்டக்காரர்களை இரண்டு இரண்டு பேராகப் பிரிக்க வேண்டும்.

ஒட்டப் போட்டிக்காக, ஒடத்தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டிருக்க வேண்டும்.

போட்டியில் கலந்துகொள்ள வரும் அந்த இரட்டையர் இருவரும் முதுகுப்புறமாக, முதுகோடு முதுகு இணைவது போல நின்று, கைகளால் பின்புறமாகக் கோர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். (அதாவது ஒருவரின் இடதுகையும் மற்றவர் வலக்கையும் சேர்வதுபோல).

இவ்வாறு அவர்கள் இணைந்த வண்ணம், ஒடத் தொடங்கும் கோட்டின் முன் நிற்கவேண்டும்.

‘ஒடுங்கள்’ என்று ஆணை கிடைத்தவுடன், இருவரும் சேர்ந்தாற்போல, எதிரே உள்ள முடி வெல்லைக் கோட்டைத் தாண்டி ஓடி முடிக்கவேண்டும். முதலில் ஓடி வருபவரே வெற்றியடைகின்றார்.

குறிப்பு: ஒருவராக இருந்தால் முன்புறமாகப் பார்த்தே ஓட வேண்டும். இவர்கள் இருவரும் முதுகுப்புறமாக இணைந்திருப்பதால், (பக்கவாட்டில் தான் முகம் இருக்கும்) பக்கவாட்டில் இருந்தே முன்புறமாக முன்னோக்கி இயங்கி ஓடவேண்டும்.

எக் காரணத்தை முன் னிட்டும் அவர்கள் பிரியக்கூடாது. பிரிந்து விட்டால் போட்டியை விட்டு உடனே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.