கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நானிருக்க பயமேன்?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

50. நானிருக்க பயமேன்?

ஆடுகளமாக, இருக்கும் இடம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் விரட்டித் தொடு பவராகவும், மற்றவர்கள் எல்லோரும் விரட்டப்படு வராகவும் விளையாட வேண்டும்.

விரட்டித் தொடுபவர் ஒருவரை ஓடித் துரத்தித் தொடப் போகும்பொழுது, அவர்கள் இருவருக்கும் குறுக்கே ஒருவர் ஓடி வந்தால், முன்னே துரத்தியவரை விட்டு விட்டு, குறுக்கே வந்தவரைத்தான் விரட்டித் தொட முயல வேண்டும்.

யாராவது ஒருவர் தொடப்படும் வரை விரட்டுபவர் இந்த முறையையே பின்பற்ற வேண்டும்.

யாராவது ஒருவர் தொடப்பட்டு விட்டால், மீண்டும் முன்போலவே ஆட்டத்தைத் தொடங்கித் தொடர வேண்டும்.

ஆடுகளம் இருக்கின்ற பொழுது, ஆடி மகிழ்கின்ற விளையாட்டுக்களைப் போலவே, வகுப்பறைக்குள்ளும் விளையாடுகின்ற விளையாட்டுக்கள் இருக்கின்றன.

நேரத்தைப் போக்கவும், அதே சமயத்தில் சுறுசுறுப்பாக இயங்கவும், இவ் விளையாட்டுக்கள் பயன் தருகின்றன. ஆடுகளம் இல்லாதவர்கள் இதுபோன்ற ஆட்டங்களை ஆடி மகிழலாம்.