உள்ளடக்கத்துக்குச் செல்

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/சர்க்கஸ் ஆட்டம்

விக்கிமூலம் இலிருந்து

III. வகுப்பறை விளையாட்டுக்கள்


51. சர்க்கஸ் ஆட்டம்

ஆடுகளம் இல்லாத இடங்களில், இருப்பவர்கள் எல்லோரும் விளையாடி மகிழவேண்டும் என்ற நிலை எழுகிற பொழுது, இருக்கின்ற சிறிய பரப்பளவுள்ள இடத்தைப் பயன்படுத்தி விளையாடுவதே” அறிவுடமையாகும். ஆகவே அதற்கும் ஏற்றவாறுள்ள விளையாட்டுக்களை இனி காண்போம்.

அமைப்பு:

வகுப்பில் அமர்ந்திருப்பவர்களை, அவரவர்கள் இருக்குமிடத்திலேயே முதலில் அமைதியாக அமர்ந்திருக்குமாறு செய்யவேண்டும்.

ஆசிரியர், ஒவ்வொருவரையும் அழைத்து, தனது இடத்தில் நிற்கவைத்து, ஒவ்வொரு மிருகத்தைப் போலவும் நடந்து காட்டும்படி சொல்லவேண்டும்.

தனித்தனியாக எல்லோரும் செய்து காட்டிய பிறகு, கடைசியாக எல்லோரும் செய்யுங்கள் என்று கூறியவுடன், தாங்கள் முன்னே செய்து காட்டிய மிருக நடையைப் போலவே ஒவ்வொருவரும் நடந்து காட்டியபடியே முன் நோக்கிவர வேண்டும்.

இதில் சிறப்பாக செய்து காட்டியவர், ஆசிரியர் முன்னர் நடத்திய இதே விளையாட்டை முன்னே வந்து நின்று மீண்டும் நடத்தித் தொடர்ந்து விளையாட வேண்டும்.