கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மனித சிலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

52. மனித சிலை

ஆட்டத்தில் பங்குபெறும் அத்தனை பேரும், வகுப்பின் கடைசியில் (சுவர் ஓரமாக) நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆசிரியர் அல்லது மாணவர் தலைவர் ஒருவர் எல்லோருக்கும் முன்னால் நின்றுகொண்டு விளையாட்டை நடத்தலாம்.

‘எல்லோரும் நடந்து வாருங்கள்’ என்று தலைவர் அல்லது ஆசிரியர் சத்தமிட்டு அழைக்கவேண்டும். உடனே, முன் விளையாட்டில் நடந்து வந்ததைப் போல, ஒரு மிருகத்தைப் போல பாவனை செய்து, அனைவரும் முன்னேறி நடந்து வரவேண்டும்.

தலைவர் தன் கையிலுள்ள விசிலை ஊத வேண்டும்.

யார் அசைகின்றாரோ சமநிலை (Balance) இழந்து தள்ளாடுகின்றாரோ, அவர் ஆட்டத்தில் தோற்றதாகக் கருதி, அவரை, ஓரிடத்தில் உட்கார வைத்துவிட வேண்டும்.

மீண்டும், முன்னிருந்த இடத்திற்கே போகச் செய்து, திரும்பவும் அதேபோல் நடந்துவரச்செய்து, சிலைபோல திடீரென நிற்கச் செய்து விளையாடவேண்டும்.

இவ்வாறு, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருப்பவரே ஆட்டத்திற்குத் தலைவராகி, மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.