கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மான் வேட்டை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4. மான் வேட்டை

அமைப்பு:

ஆட வந்திருக்கின்ற அனைவரையும் இரு சமகுழுக்களாகப் பிரிக்க வேண்டும். பிறகு, எந்தக் குழு பந்தை ஆடத் தொடங்குகின்ற குழு என்று நாணயத்தைச் சுண்டுவதின் மூலம் தேர்ந்தெடுத்துக் கொண்டு, பந்தை ஆட இருக்கின்ற குழுவை, முதல் ஆட்டம் போலவே வட்டமாக நிற்க வைக்க வேண்டும்.

ஆட்டத்தின் நோக்கம்:

வட்டமாக நிற்பவர்கள் அனைவரும் வேட்டைக்கு வந்தவர்களாகவும், வட்டத்திற்குள் நிற்பவர்கள் அனைவரும் மான்களாகவும் மாறிவிடுவார். ஆகவே, வளைக் கப்பட்ட வட்டத்திற்குள் சிக்கிக் கொண்ட மான்களை, வேட்டைக்காரர்கள் ஒவ்வொருவராகச் சாடுகின்றதுபோல, தங்கள் வசமுள்ள ஒரு பந்தின் மூலம் அடித்துவிட வேண்டும். இவ்வாறு பந்தால் சாடுகின்ற முறையே ஆட்டத்தின் நோக்கமாகும்.

ஆடும் முறை:

பந்து முழங்கால்களுக்குக் கீழே தாக்கினால்தான் மானாக உள்ளவர் தாக்கப்பட்டதாகக் கருதப்படுவார். முழங்கால்களுக்குக் கீழே பந்துபடும்பொழுது, கைகளால் தடுத்துக் கொண்டாலும், அது குறிப்பிட்ட இடத்தைக் தாக்கியது என்றே கருதப்பட்டு, அதற்குரியவர் வெளியேற்றப்படுவார். இவ்வாறு எல்லோரும் வெளியேற்றப்படும் வரை, ஆட்டம் தொடரும்.

வட்டத்திற்குள் பந்து கிடந்தால், உள்ளேயிருப் பவர்கள் அதனைக் காலால் உதைக்கவோ அல்லது எடுத்து வெளியே எறிவதோ கூடாது. வட்டத்தில் நிற்பவர்கள் வந்து பந்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அங்கிருந்தே பந்தால் அடிக்காமல், தன் இடத்திற்கு வந்தேதான் பந்தை ஆட வேண்டும். பிறகு, வட்டத்தில் உள்ளவர்கள் மான்களாகவும், மான்களாக ஆடியவர்கள் வேட்டைக்காரர்களாகவும் மாறி ஆட, ஆட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெறும்.