கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மேலாளர் ஆடுகிறார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. மேலாளர் ஆடுகிறார் !

அமைப்பு:

முதலில் விளக்கப்பெற்ற, விளையாட்டைப். போலவேதான் இந்த விளையாட்டு என்றாலும், ஒரு சிறிய மாற்றம் உண்டு. ஆட இருப்பவர்கள் அனைவரும் வட்டமாய் நிற்க, மேலாளர் என்னும் ஒருவர் முக்காலி போன்ற உயர்ந்த இடத்தில், வட்டத்தின் மையத்தில் நிற்க, இப்பொழுது அவருக்கு மெய்க்காப்பாளர் யாரும் இல்லை. அவருக்கு அவரே துணை. ஆமாம்; அவருக்கு அவரே காவல்.

ஆட்டத்தின் நோக்கம்:

வட்டத்தில் நிற்கும் ஆட்டக்காரர்கள், மேலேறிநிற்கும் அவரை. முழங்கால்களுக்குக்கீழே படும்படிபந்தால் அடிக்க முயற்சிக்க வேண்டும். மேலாளர், முக்காலியில் இருந்து கீழே குதித்துவிடாமலும், தன் கால்களில் பந்துபடாமலும், காலைத் தூக்கியும் கைகளால் தடுத்தும் மறைத்தும் ஆடிக் கொண்டிருக்கலாம்.

ஆடும் முறை:

தன் கால்களில் பந்து படாதவரை, தப்பித்துக் கொள்ளும் வரை அவர் தொடர்ந்து ஆடலாம். முக்காலியில் இருந்து கீழே குதித்து விட்டாலோ, கால்களில் பந்து பட்டாலோ, அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். மீண்டும் ஒருவர் மேலாளராக வர, மேலாளர் மற்றவர்களுடன் சேர்ந்து வட்டத்தில் நின்று, முன்போல் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.