கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வட்டத்தில் தொட்டாடுதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

94. வட்டத்தில் தொட்டாடுதல்

முன் ஆட்டம் பேலவே, குழுக்கள், தங்களுக்குள்ள இடத்தில் வட்டமாக நிற்கவேண்டும். எப்பொழுதும் போல், எல்லா வட்டத்தின் அமைப்பும் அளவும் ஒரே மாதிரியாக அமைந்திருக்க வேண்டும்.

போட்டியைத் தொடங்கலாம் என்றதுமே, ஒவ்வொரு குழுவிலும் உள்ள ஒருவர், அதாவது வட்டத்துக்கு வெளியே நின்றுகொண்டிருப்பவர், (கடிகாரம் சுற்றும் முறைக்கு எதிர்த் திசைபோல) இடது கைப்புறம் திரும்பி ஓடுகின்ற தன்மையில், வட்டத்தைச் சுற்றி வேகமாக வந்து, தன் இடத்தில் நிற்பதுடன், தன் வலது கைப்புறம் நிற்பவரையும் தொட்டுவிட்டு நிற்கவேண்டும்.

தொடப்பட்டவர் உடனே வட்டத்திற்கு வெளியே வந்து ஓடத் தொடங்கி, முன்னவர் போல், ஓடி வட்டத்தைச் சுற்றி ஓடி வந்து நிற்கும் பொழுது, தன் அருகில் உள்ளவரைத் தொட்டு ஆட்டத்தைத் தொடரச் செய்யவேண்டும்.

ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் வட்டத்தைச் சுற்றி முடிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து, அதில் முன்னுக்கு ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெறுகிறது.