கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வட்டப் பந்தாட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

93. வட்டப் பந்தாட்டம்

அந்தந்த குழுக்கள், தங்களுக்குள்ளேயே வட்டம் போட்டு, வட்டமாக நிற்கவேண்டும், அதே சமயத்தில், அனைத்துக் குழுக்களும் நிற்கின்ற வட்டத்தின் அளவானது சமமாக இருக்கின்றதா என்பதையும் கண்டறிந்து கொள்வது நல்லது.

குழுத் தலைவர் நிற்க வேண்டும்.

போட்டியைத் துவக்கியவுடன், பந்துடன் நடுவில் நிற்கும் குழுத் தலைவர், தன்னிடமுள்ள பந்தை, எதிரே. வட்டத்தில் நிற்பவர் ஒருவரிடம் எறிய, பந்தைப் பெற்றுக் கொண்டவர் மீண்டும் அந்தப் பந்தைத் தலைவரிடம் எறிய பிடித்துக் கொண்ட தலைவர் மீண்டும் முதலில் ஆடியவருக்கு வலப்புறம் நிற்பவரை நோக்கி எறிய, அவர் மீண்டும் தலைவருக்கு வழங்கவேண்டும்.

மேற்கூறியவாறு, பந்தை மாறிமாறிப் போட்டுப் பிடித்துக் கொண்டு, வட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு முறை பந்தைப் பிடித்து, எறிகின்ற வாய்ப்புக் கிடைக்குமாறு ஆடி முடிக்க வேண்டும்.

முதலில் முடிக்கின்ற குழுவே வெற்றி பெறுகிறது. குறிப்பு: பந்தைப் பிடிக்கும்பொழுது கை தவறி விட்டால், அதற்குப் பொறுப்பாளர்தான் ஓடிச் சென்று பந்தை எடுத்து வந்து ஆடவேண்டும்.