கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வா பார்க்கலாம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

45. வா பார்க்கலாம்

அமைப்பு:

43 வது ஆட்டத்திற்கு உரிய ஆடுகளத்தைப் போல அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.

ஆடுகளத்தின் இருபுறமும் ஆட்டக்காரர்களை இரு சம எண்ணிக்கை இருக்கும்படி பிரித்து, நிறுத்தி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணை ஒன்றிலிருந்து ஆரம்பித்து, எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும்.

இப்பொழுது இரு குழுவிலும் ஒரே எண் வரும் ஆட்டக்காரர்கள் இருப்பார்கள் அல்லவா?

ஆடும் முறை:

நடுக்கோட்டின் மேலே ஒரு ஆட்டக்காரர் நின்று கொண்டு, ஒரு எண்ணைக் (6 என்று வைத்துக் கொள்வோம்) கூப்பிட, இரண்டு குழுக்களிலும் உள்ள 6 என்ற எண்ணுக்குரியவர்கள் இருவரும் தாங்கள் வரிசையாக நிற்கும் குழுவிலிருந்து முன்னுக்கு வந்து நிற்க வேண்டும். தனது குழுவின் முன் வந்துநின்றவுடன், இருவரும், நடுவில் நிற்பவர் கையில் படாமல் அடுத்த குழுப் பகுதிக்குச் சென்று, அங்குள்ள கோட்டைத் தொட்டு விட்டு, மீண்டும் தன் பகுதிக்கு வந்துவிடவேண்டும்.

இடையிலே நிற்பவரால் தொடப்படாமல் தன் குழுவுக்கு வந்துவிட்டால், வந்த குழுவிற்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

இடையிலே தொடப்பட்டால், அவர் நடுவிலே நிற்பவராக மாற, நடுவிலே நிற்பவர் அவரின் எண்ணுக்குரியவராக மாறவேண்டும். அதேபோல் அவர் அழைக்க, ஆட்டம் தொடரும்.

எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைத்த பிறகு, இறுதியில் அதிக வெற்றி எண்கள் பெற்றிருக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.