உள்ளடக்கத்துக்குச் செல்

சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்/ம.பொ.சி. யுடன் சிறை புகுவேன்!

விக்கிமூலம் இலிருந்து


'ம.பொ.சி. யுடன் சிறை புகுவேன்!'
முதல்வர் கலைஞர் உறுதி

27-4-74 அன்று சுயாட்சித் தீர்மானம் பற்றிய விவாதத்தை முடித்து வைத்து முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி பேசுகையில் ம.பொ.சி. பற்றிக் கூறியது வருமாறு:

நாம் நமது மாநிலத்திற்கு சுயாட்சி பெறப் போராட வேண்டுமென்று தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் கூறினார். "சிறைக்குச் செல்லத் தயார்" என்றார். அப்படி ஒரு நிலைமை தவிர்க்க முடியாதது என்றால், நானும் அவருடன் சிறையில் இருப்பேன். அவரைத் தனியாக விடமாட்டேன்; என் அரசியல் பொது வாழ்வில் இந்தத் தீர்மானத்தை இரு அவையிலும் நிறைவேற்றியதன் மூலம் நான் ஒரு பெரிய கடமையைச் செய்து முடித்ததாகவே கருதுகிறேன். இந்தக் கடமையில் வெற்றி பெறப் பதவியையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் உரிய காலம் விரைவில் வரும் என்றே எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன் - தயாராக இருக்கிறேன்.