சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/009-010

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


92. மறதி

ஒரு மாநிலத்தின் தலைமை நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்பட்டார். பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், நகரவாயிலில் முடிதிருத்தகம் வைத்திருந்த ஒரு முடிதிருத்துபவனை அழைத்துவர ஆணை பிறப்பித்தார். அவ்வாறே அவனும் அழைத்து வரப்பட்டான். பின்னர் எவ்வித உசாவல் ஏதுமின்றி, மூங்கில் தடியால் 40 அடிகள் கொடுக்க கட்டளை பிறப்பித்தார். தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது நீதிபதி “நான் முன்பு ஒருநாள் உன் நிலையத்திற்கு வந்தபோது நீ என்னை தக்க மரியாதையுடன் நடத்தவில்லை” என்றார். இதனைக் கேட்ட முடிதிருத்தும் கலைஞன் ஐயா, தாங்கள் என் எளிய நிலையத்திற்கு என்றுமே வந்ததில்லையே” என்றான்.உடனே நீதிபதி “ஆமாம் அப்படித்தான், நான் உன் நிலையத்திற்கு வருகை தந்ததே இல்லை” என ஒப்புக் கொண்டு, அவன் அதுவரை பெற்ற தண்டனைக்கு ஈடாக ஆயிரம் பணம் கொடுத்தனுப்பும்படி மறு ஆணை வழங்கினார்.

ஆனால் நீதிபதி குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி அவனது நிலையத்தில் நடந்தது உண்மைதான். ஆனால் அப்போது அவனது நிலையம் வேறொரு மாநிலத்தில் இருந்தது.


93. கையெழுத்து

தெளிவாகக் கையெழுத்து எழுதத் தெரியாத ஒருவன் கையெழுத்து எழுதுவதில் மிகவும் ஆர்வமுள்ளவனாக இருந்தான். வருவோர் போவோரிடம் அவர்களின் உடமைகளில் அவர்களின் பெயர் மற்றும் அழகிய தொடர்களை எழுதிக் கொடுக்க முனைவதுண்டு. இது அவ்வூரில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒருநாள் இந்தக் கையெழுத்து மேதை, எதிரே ஒரு மனிதன் விசிறியால் விசிறிக் கொண்டு தன்னைக் கடந்து செல்வதைக் கண்டு, தன் எழுதும் ஆசையை அடக்க முடியாதவனாக, அவரை அழைத்து அந்த விசிறியில் அவர் பெயரினை எழுதித் தருவதாகச் சொன்னான். உடனே அந்த மனிதன் கையெழுத்துக் கலைஞன் முன் மண்டியிட்டு வணங்கினான். இதனைக் கண்டு திகைப்புற்ற கையெழுத்துக் கலைஞன், இவ்வளவு மரியாதையும் பணிவும் எனக்குச் செலுத்த வேண்டா. நான் சில எழுத்துகளை மட்டும் தான் உங்கள் விசிறியில் எழுதப் போகிறேன்” என்றான். அதற்கு அந்த மனிதன் மறுமொழியாக “நான் அதை நன்கு அறிவேன். நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம் தயவு செய்து அந்தப் பணியை நீங்கள் செய்ய வேண்டா” என்றான் மிகப் பணிவோடு. அத்தனை அச்சம் அந்த மனிதனுக்கு அவனின் எழுத்தின் மீது.


94. குடிக்கத் துடிக்கும் மனம்

மது வெறி கொண்ட ஆசிரியர் ஒருவர் மற்றொரு வெறி மது விரும்பும் வெறியன் ஒருவனை வேலைக்கமர்த்தினான். அந்த மதுவெறியன் வைத்திருந்த மதுவினில் பெரும் பகுதியை வேலைக்காரனே குடித்துத் தீர்த்தான். எனவே அந்த ஆசிரியர் வேலைக்காரனையே அதன்பின் அமர்த்தவில்லை. அப்படியே ஒருவேளை வேலைக்கு அமர்த்தினாலும், மதுவைப் பற்றி சிறிதும் அறியாத சிறுவனையே அமர்த்த வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டார்.

ஒரு நாள் ஆசிரியரின் நண்பர் ஒருவர் ஒரு சிறுவனை அழைத்து வந்து அவனை வேலைக்காரனாக அமர்த்திக் கொள்ளும்படி பரிந்துரை செய்தார். ஆசிரியர் அச் சிறுவனிடம் மஞ்சள் நிறமான அரிசி மதுப்பாட்டிலைக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். சிறுவன் அம் மதுவின் பெயரைச் சரியாய் சொன்னான். மதுவின் பெயர்களை அறிந்து வைத்திருக்கும் இச் சிறுவன் அவற்றின் சுவைகளையும் அறிந்திருப்பான் என்று எண்ணி அவனை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மறுத்தார். பின்னர் வேறு ஒரு சிறுவனை வேறு ஒரு நண்பர் வேலைக்குப் பரிந்துரைத்தார். அவனிடம் மிக உயர்வகை மதுவினைக் காட்டி அதன் பெயர் கேட்டார். அச் சிறுவனோ அதன் பெயரைத் தப்பாது செப்பினான். உறுதி, இவன் பெருங்குடிக்காரனாய் இருக்க வேண்டும் என நினைத்து அவனையும் புறக்கணித்தார்.

எதிர்பாராத வகையில் மூன்றாவது ஒரு சிறுவன் பரிந்துரைக்கப்பட்டான். இம்முறை இச் சிறுவன் வெள்ளை நிறமதுவிற்கும் மஞ்சள் நிற மதுவிற்கும் வேறுபாடு தெரியாமல் திகைத்தான். அவன் மதுவினைப் பற்றி ஒன்றும் அறியாதவன் எனக் கணித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.

ஒருநாள் ஆசிரியர் வீட்டை வேலைக்காரனிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் சென்றார். அப்படி அவர் செல்லும்போது வேலைக்காரனிடம், “சமையல் அறையின் சுவரில் ஒரு பன்றியின் தொடை தொங்கிக் கொண்டிருக்கிறது. முற்றத்தில் கோழி மேய்ந்து கொண்டிருக்கிறது. எனக்காக அவற்றைப் பாதுகாத்துக்கொள். உள் அறையில் வெள்ளை மது நிரம்பிய குடுவை ஒன்றும், சிவப்பு மது நிறைந்த ஒரு குடுவையும் வைத்துள்ளேன். அவற்றைத் தொட்டுக்கூட பார்க்காதே. யாராவது அதனை அருந்தினால் அவர்களின் வயிறும் குடலும் ஒரு மணி நேரத்தில் வெடித்துச் சிதறிவிடும்” என்று மூன்று முறை வற்புறுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றார்.

அவர் சென்றதும் முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை அறுத்து சமைத்துச் சாப்பிட்டான். பின் பன்றியின் தொடையையும் தின்று தீர்த்தான். பின்னர் இரண்டு குடுவைகளிலும் இருந்த மதுவில் மூழ்கியெழுந்தான். போதை தலைக்கேறியது.

திரும்பி வந்த ஆசிரியர் சிறுவன் மரக்கட்டை போல் தரையில் கிடந்து உறங்குவதைக் கவனித்தார். அங்கு நிரம்பி வழிந்த மணத்திலிருந்து நிலமையை நன்கு புரிந்து கொண்ட ஆசிரியர் அவனைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினார் சினத்தில்.

கண்ணீரில் குழந்தை கதறியது, “நீங்கள் சென்றதும் நான் வீட்டிலுள்ள அனைத்து உடமைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டேன். எல்லாவற்றையும் நான் என் ஆதிக்கத்தில் அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். திடீரென்று பூனை ஒன்று பதுங்கி வந்து பன்றித் தொடையைக் கவ்விச் சென்றது. அடுத்து நாய் ஒன்று ஓடி வந்து முற்றத்தில் நின்று மேய்ந்து கொண்டிருந்தக் கோழியைப் பக்கத்து வீட்டு முற்றத்திற்குத் துரத்தி விட்டது. இந்த முறைகேடுகளைக் கண்டு அதிர்ந்து போன நான், என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். குடுவைகளிலிருந்த மதுவைப் பற்றி நீங்கள் கூறிய எச்சரிக்கை மொழிகள் என் நினைவுக்கு வந்தன. எனவே சிவப்புக் குடுவைலிருந்த மதுவைக் காலி செய்தேன். ஆனால் நான் அதனைக் குடித்த பின்னும் உயிரோடிருப்பதை உணர்ந்தேன். எனவே நான் மஞ்சள் குடுவை மதுவையும் குடித்தேன். பின்னர் நீங்கள் தற்போது கண்ட வண்ணம் வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயான் இப் பரிதாப நிலைக்குள்ளானேன்” என்றான். கேட்டுக் கிறுகிறுத்தார் ஆசிரியப் பெருமகனார்.

95. ஒரு பறவை

புதுவையின் வட பகுதியில் ஒரு மனிதர் பறவை ஒன்றை வளர்த்து வந்தார். அந்தப் பறவை ஒரு நூறு வகைப் பறவைகளைப் போல் பாடும் திறமை கொண்ட சிறப்புப் பறவை என்று பெருமை பாராட்டி வந்தார். அதனைப் போற்றிப் பாதுகாக்க ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்-

தினார். அடிக்கடி அதனை வீதிக்கு எடுத்து வந்து மக்கள் பார்வைக்கு வைப்பார்.

ஒரு கோடை நாளில் அதனைக் குளிப்பாட்டவேண்டியதாயிற்று. பறவையின் ஆண்டை வேலைக்காரச் சிறுவனிடம், “கவனமாக அதனை நீராட்டு; நீராட்டும் போது ஒரு தூவல் உதிர்ந்தாலும் அதற்கு ஈடாக நீ உன் கால்களை ஒன்றைத் தர வேண்டும். கவனம்; கவனம்” என்று எச்சரித்தார். அவ்வாறே பறவையைக் கவனத்தோடு நீராட்டிக் கொண்டிருந்தான் சிறுவன். அந்த வேளையில் வீட்டுக்கார அம்மா வேறொரு பணியைத் தனக்காகச் செய்ய ஆணையிட்டாள். சிறுவனோ “என்னால் பறவையை விட்டு ஒரு கணம் கூட விலக முடியாது, ஒரு தூவல் உதிர்ந்தாலும் நான் என் காலை இழந்து விடுவேன்” என்று மறுமொழி பகர்ந்தான்.

இந்த மொழிகளைக் கேட்டு வீட்டுக்காரி சினத்தில் கொதித்தாள். சீறிப் பாய்ந்தாள். பறவையின் தூவல்கள் அனைத்தையும் பிய்த்து எறிந்தாள்.

சற்று நேரத்தில் ஆண்டை வந்தான். பறவையின் அலங்கோலத்தைக் கண்டு ஆத்திரம் மேலிட “என் இனிய பறவையின் இறகுகளைப் பிய்த்தெறிந்தது யார்?” என்று ஆவேசத்தோடு கேட்டான்.

சிறுவன் அஞ்சி வாயடைத்து நின்றான். வீட்டுக்காரி உறுமினாள் “நான் தான்” என்றாள். ஆண்டை மெல்லிய குரலில் “பிடுங்குதல் சற்றுக் கடினமான வேலைதான். தூவலில்லாதது பறவைக்குக் குளிர்ச்சியாக இருக்கும் நல்லது, நல்லது. நீராட்டுவதினும் இது சிறந்தது தான்” என்று பக்க வாத்தியம் இசைத்தான் ஆண்டை.

96. மனித உடையில் குரங்கு

அரசு அதிகாரி ஒருவர் தமது சட்ட உதவியாளரை அனுப்பி ‘மனித உருவில் இருக்கும் மனிதனல்லாத’ ஒருவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். இந்த வண்ணனை உதவியாளருக்குப் புரியாத புதிராக இருந்தது. குழம்பினான். தன் மனைவியிடம் அது பற்றிக் கலந்தெண்ணினான். அவனின் மனைவியோ மிகவும் புறக்கணிப்பாக “இந்த ஆணையை நிறைவேற்றுவது கடினமானது அல்ல; மிகவும் எளிது” என்றாள். “ஒரு குரங்கிற்கு மனிதனின் தொப்பியையும், உடையையும் அணிவித்துப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பணி முடிந்துவிடும்” என்றாள்.

மனைவியின் ஆய்வுரைப்படி செய்தான் ஊழியன். அதிகாரி மகிழ்ந்தான். குரங்கிற்குப் பழங்கள் தந்தான்.

அதனை அன்போடு நடத்தினான். பின்னர் தன்னோடு குடிப்பு அருந்த அந்தக் குரங்கினை அழைத்து வரும்படி அருகிலிருந்தவர்களிடம் ஆணையிட்டான். பின் ஒருமுறை மது அருந்தியதும் குரங்கு தன் கவிப்பினையும் உடையினையும் அகற்றி எறிந்துவிட்டுக், கத்திக் கொண்டு அங்குமிங்கும் குதித்துத் தாவி விருந்து மண்டபத்தில் பேரிரைச்சலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியது.

அதிகாரி சொன்னான் “ஓ விலங்கே, உனக்கு இங்கிதம் தெரியவில்லை. மதுஅருந்தும் முன் நீ மனிதனாக இருந்தாய். குடித்தபின் நீ மனித இயல்பை மட்டுமில்லை தோற்றத்தையே இழந்தாய்” என்று.

97. கீழ்மை உணர்வுள்ள அரசு அதிகாரி

கஞ்சத்தனமிக்க அரசு அதிகாரி ஒருவர் பணியின் பொருட்டு ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்திற்குத் தலைநகரிலிருந்து அனுப்பப்பட்டான். அந்த அமைச்சகத்திற்குள் நுழையும் முன் தன்னைப் போலவே பசியோடிருந்த தன் ஏவலன் முன்னிலையில் ஒரு கோப்பை கம்பங் கூழ் அருந்தினான். பின் அந்த ஏவலன் தானும் ஒரு குடுவைக் கூழ் சாப்பிட எண்ணி, மற்றவர்கள் முன்னிலையில் அதற்காகப் தன் ஆண்டையிடம் பணம் கேட்டால் மறுக்கமாட்டான் என எண்ணிப் பணம் கேட்டான். அதிகாரியும் அவ்வாறே வேண்ட வெறுப்பாகப் பணம் கொடுத்தான்.

பின் அமைச்சகத்தில் தன் பணியினை முடித்துக் கொண்டு, வீடு திரும்ப வண்டியேறினான். ஏவலன் வண்டியின் முன்னிருந்து குதிரையை ஓட்டினான். வண்டி புறப்பட்டதும் அந்த அதிகாரி ஏவலனிடம் “மரியாதை தெரியாத மடையனே, நீ என்ன என்னிலும் மூப்பா? முன்னிருந்து குதிரையோட்டுகிறாய்?” என்று கேட்டான். உடனே ஏவலன் அதிகாரியின் பக்கவாட்டில் அமர்ந்து குதிரையை ஓட்டினான். மீண்டும் அந்த அதிகாரி “நீ என்ன எனக்குச் சமநிலையில் உள்ளவனா? அருகில் அமர்ந்து குதிரையை ஓட்டுகிறாய்?” என்றான். பின் அந்த ஏவலன், வண்டியின் பின்புறம் அமர்ந்தவாறு குதிரையினை ஓட்டினான். மீண்டும் சினமுற்ற அந்த அதிகாரி “குதிரை ஓடும் போது எழும் தூசுகளெல்லாம் நேரிடையாக என் மீது வந்து படுகின்றனவே என்றான். வேறு வகையறியாத அந்த ஏவலன் வண்டியை விட்டுக் கீழிறங்கி “ஐயா, எப்படி நான் வண்டியினை ஓட்டுதல் வேண்டும் என்று கட்டளையிட்டால், அவ்வண்ணமே செய்கிறேன்” என்று பணிவுடன் கூறினான்.

அதனைக் கேட்ட அதிகாரி “நீ எங்கிருந்து ஓட்டினாலும் எனக்கு அக்கறையில்லை. நீ குடித்த கம்பங்கூழிற்கு நான் கொடுத்த பணத்தை இப்போதே திரும்பத் தந்து விட்டால், நீ எப்படி எங்கிருந்து குதிரையை ஓட்டினாலும் எனக்கு ஏற்புடையதே” என்றார்.


98. யாரும் முட்டாள் இல்லை

பொறுமைமிக்க மனிதன் ஒருவன் ஒருநாள் ஓர் இணை காலணிகளை வாங்கினான். எதிரில் அவ்வழியாய் வந்த முன்கோபி ஒருவன் “எவ்வளவு பணம் இதனை வாங்கத் தந்தாய்?” என்று கேட்டான். எதிலும் எளிதாகவும் அமைதியாகவும் செயல்படும் முதல் மனிதன் மெதுவாக ஒரு காலணியினை உயர்த்திக் காண்பித்து ‘25 பணம் ஆனது’ என்றான். அவன் சொல்லி முடிக்கும் முன் ஆத்திரக்காரன் “முட்டாளே காலணிகளுக்கா 25 பணம் தந்தாய்?” என்று கோபித்துக் கொண்டான்.

முதல் மனிதன் பொறுமையிழக்காமல் “நீங்கள் மறுப்பீர்களானால், அவர்களையே போய் கேட்கலாம்; வாருங்கள், ஆனால் ஆத்திரப்படாமல் சற்று அமைதிகாத்துக் கொள்ளுங்கள். இப்போது சினந்து கொண்டது போல் சினந்துக் கொள்ளாதீர்கள்” என்றான். அவன் மேலும் மற்றொரு காலணியைத் தற்போது உயர்த்திக் காண்பித்து “இந்தக் காலணியும் அந்த விலையில் அடக்கம் தான்” என்றான்.

99. ஆவி கேட்டப் பணம்

நடை பயணி ஒருவர் தம் உடைமைகளையெல்லாம் கட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சாத்தூர் வழியாக வந்தபோது, அங்கு வறுமை தாண்டவமாடியதும் பலபோ படடினியால் மடிந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட அழிவுகளினால் சத்திரங்கள் பல மூடப்பட்டிருந்தன. வழிப்போக்கர்கள் கோயில்களில் தங்கி வந்தனர். அப்படி ஒரு கோயிலில் தங்கும்போது பல கல்லறைகள் அச்சத்திரததின் கீழ்ப் பகுதியிலும், ஒரே ஒரு கல்லறை மட்டும் மேற்குப் பகுதியிலும் இருப்பதைக் அந்த வழிப்போக்கன் கவனித்தான். நன்றாக இருண்டிருந்த மூன்றாம் சாமத்தில் ஒவ்வொரு கல்லறையிலிருந்தும் மெலிந்த கைகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. மேற்குப் பகுதியிலிருந்த கல்லறையிலிருந்தும் ஒரு கை வெளியே நீடடிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கை மட்டும் சதைப்பிடிப்புள்ள கையாகத தோன்றியது. நிலமையைப் புரிந்து கொண்ட வழிப் போக்கன் துணிவை வரவழைத்துக் கொண்டு, புன்னகை பூத்த வண்ணம் அவற்றைப் “பத்திமிக்கவர்களே, உங்கள் மெலிந்த கைகளிலிருந்து நீங்கள் எப்படிபட்ட ஏமாற்றத்தையும் வேதனையையும் இங்கு நுகர்ந்தீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த உலகிலும் உங்கள் வேதனைகளைக் குறைக்க பணம் வேண்டுகின்றீர்களா?” என்று கேட்டு வரவேற்றான். பின்னர் ஒவ்வொரு கைகளிலும் ஒரு நாணயத்தை வைத்தான். கீழ்ப் பகுதியிலுள்ள கல்லறையில் காணபபட்ட கைகள் மீண்டும் கல்லறைக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் மேற்குப்பகுதியில் தனித்திருந்த அந்தக் கல்லறையில் நீட்டிக் கொண்டிருந்த கை மட்டும் வெளியிலேயே நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தான் அந்த வழிப்போக்கன். பின்னர் அவன் “இந்த ஒரு நாணயம் உனக்குப் போதாதென்றால் மேலும் தருகிறேன் என்று சொல்லி அந்தக் கையில் நூறு நாணயங்களுக்கு மேலாகக்

கொட்டினான். இருப்பினும் அது மறையவில்லை. கோபமுற்ற வழிப்போக்கன் “நீ அதிகம் கேட்கிறாய்; மிக அதிகம் கேட்கிறாய்” என்றவாறு தான் வைத்திருந்த நாணயங்கள் அனைத்தையும் வைத்தான். உடனே கை உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டது.

வழிப்போக்கன் வியப்புற்றான். வியப்பு மேலிட விளக்கொன்றை ஏந்திய வண்ணம் ஒவ்வொரு கல்லறையிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துப் பார்த்தான். கீழ்ப் பகுதியில் காணப்பட்ட கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் வறுமையால் மடிந்தவர்கள் என்று அறிந்தான். மேற்குப் பகுதி கல்லறையில் “மதிப்பிற்குரிய திரு.... அவர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரி. ........ மாநிலம்” என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு, வியப்பு நீங்கவும், விளக்கம் பெற்றான் அந்த வழிப்போக்கன்.

100. குடிகாரன் சூளுரை

ஓயாத குடியன் ஒருவன் இருந்தான். “உன் உடல் நலத்தைக் காக்கவாவது நீ குடிக்காமல் இருக்க வேண்டும்” என்று அவன் நண்பர்கள் அவனைக் கேட்டுக் கொள்கின்ற பரிதாப நிலை ஏற்படும் வரை நீ குடித்துக் கொண்டேயிருந்தான். குடிகாரன் தன் நண்பர்களிடம் “நானும் குடியை முழுமையாக விட்டு விடத்தான் நினைக்கிறேன். ஆனால் என் மகனின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது. அவனது பிரிவாற்றாமையை மறக்கத்தான் குடிக்கிறேன். அவன் மட்டும் என்னிடம் திரும்பி வந்துவிட்டால் குடியை நிறுத்திவிடுவேன்” என்றான்.

இதனைக் கேட்ட அவனது நண்பர்கள் “அப்படியானால் இப்போது நீ சொல்லியபடி வாக்குத் தவறாது கொட்டினான். இருப்பினும் அது மறையவில்லை. கோபமுற்ற வழிப்போக்கன் “நீ அதிகம் கேட்கிறாய்; மிக அதிகம் கேட்கிறாய்” என்றவாறு தான் வைத்திருந்த நாணயங்கள் அனைத்தையும் வைத்தான். உடனே கை உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டது.

வழிப்போக்கன் வியப்புற்றான். வியப்பு மேலிட விளக்கொன்றை ஏந்திய வண்ணம் ஒவ்வொரு கல்லறையிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துப் பார்த்தான். கீழ்ப் பகுதியில் காணப்பட்ட கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் வறுமையால் மடிந்தவர்கள் என்று அறிந்தான். மேற்குப் பகுதி கல்லறையில் “மதிப்பிற்குரிய திரு. அவர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரி. ........ மாநிலம்” என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு, வியப்பு நீங்கவும், விளக்கம் பெற்றான் அந்த வழிப்போக்கன்.

100. குடிகாரன் சூளுரை

ஓயாத குடியன் ஒருவன் இருந்தான். “உன் உடல் நலத்தைக் காக்கவாவது நீ குடிக்காமல் இருக்க வேண்டும்” என்று அவன் நண்பர்கள் அவனைக் கேட்டுக் கொள்கின்ற பரிதாப நிலை ஏற்படும் வரை நீ குடித்துக் கொண்டேயிருந்தான். குடிகாரன் தன் நண்பர்களிடம் “நானும் குடியை முழுமையாக விட்டு விடத்தான் நினைக்கிறேன். ஆனால் என் மகனின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது. அவனது பிரிவாற்றாமையை மறக்கத்தான் குடிக்கிறேன். அவன் மட்டும் என்னிடம் திரும்பி வந்துவிட்டால் குடியை நிறுத்தி விடுவேன்” என்றான்.

இதனைக் கேட்ட அவனது நண்பர்கள் “அப்படியானால் இப்போது நீ சொல்லியபடி வாக்குத் தவறாது நடப்பேன் என்று உறுதி செய்து கொடு” என்றனர். அவனும், என் மகன் திரும்பி வந்தபின்னும் நான் குடியை நிறுத்தாமல் இருந்தால் மதுபானச் சால்களின் கீழ் அகப்பட்டு நசுங்கியோ, மதுக்கிண்ணம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறியோ, மதுக் குளத்தில் வீழ்ந்து மூழ்கியோ மடிவேனாக” என்று சூளுரை செய்தான். நிறைவு அடைந்த நண்பர்கள் “உன் மகன் இப்போது எங்கே இருக்கிறான்?” என்று வினவியதும் அவன் சொன்னான் “அவன் தற்போது “அண்ணல் காந்தி நகர்” என்னுமிடத்தில் எனக்காக மது வாங்கச் சென்றிருக்கிறான்” என்று.

101. நீதியின் கண்களில் நியாயமே

வழக்கொன்றில் வாக்கு மூலங்களைக் கேட்பதற்காக, வழக்காளியையும், எதிர் வழக்காளியையும் மன்றத்திற்கு அழைத்து வருமாறு தன் ஏவலனுக்கு ஆணையிட்டார். கையூட்டு வாங்குவதில் கொஞ்சமும் அஞ்சாத அரசு அதிகாரியொருவர், மனுதாரர் 500 பணத்தை அதிகாரிக்கு அளித்தார். மாற்றுக் கட்சிக்காரரும் இதனைக் கேள்விப்பட்டு அதைப்போல் இருமடங்கு பணத்தை அதே அதிகாரிக்குத் தந்தார்.

ஆய்வுரைத் தீர்ப்பின் போது அதிகாரி வழக்குத் தொடுத்தவருக்குச் சவுக்கடி தண்டனை வழங்கினார். இரக்கத்துக்குரிய வழக்குத்தொடுத்தவரோ தான் 500 பணம் தந்ததைக் கைசெய்கையால் சுட்டிக்காட்டி, “என் வழக்கில் நேர்மையிருக்கிறது நடுவரே” என்றான். அதிகாரியோ பதிலுக்கு எதிராளி இருமடங்கு கையூட்டுத் தந்ததைச் (சமிக்ஞை) கைசெய்கை மூலம் சுட்டிக்காட்டி, “எதிரொளியின் கூற்றிலும் இரு மடங்கு நேர்மை உள்ளதே” என்றார்.