சிவஞானபோதம்

விக்கிமூலம் இலிருந்து
(சிவஞான போதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நூலாசிரியர் குறிப்பு[தொகு]

இந்த அற்புதமான தத்துவ நூலை அருளிச் செய்தவர் மெய்கண்டார் ஆவார். இவர் திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் தோன்றித் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவர். இவரது சந்தானமே திருக்கயிலாய பரம்பரை என வழங்கப்படுகின்றது. சைவசித்தாந்த நூல்களிலேயே முடிமணியாக விளங்குவது இந்நூலே. ஆலின் விதை போன்று சுருக்கமானது, ஆம்! பன்னிரண்டே சூத்திரங்களில் தத்துவம் முழுமையும் விளக்குவது. திருக்குறளைப் போன்று மிகச் சுருக்கமானது, ஆழ்ந்த பொருளை உடையது. சிறந்த தருக்க முறையைக் கையாண்டு பதி, பசு, பாசம் அதாவது இறைவன், உயிர், உலகம் பற்றிக்கூறி அவற்றின் உண்மையை நிறுவுவது.
இந்நூலின் சிறப்பினை, வேதம் என்பது பசு, அந்தப் பசுவின்பால் ஆகமம், திருமுறைகள் அப்பாலின் நெய்; சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய நறுஞ்சுவை எனக்கூறுவர். இங்கு வேதம் என்பது, திருக்குறள்; ஆகமம் என்பது திருமந்திரம்; திருமுறைகள் என்பன பன்னிருதிருமுறைகள் அதாவது ஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய அருளாளர்கள் அருளியவை.
மெய்கண்டாருக்கு 49 மாணவர்கள் இருந்தனர். அவர்களுள் முதன்மையானவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். இந்த 49 மாணவர்களும் தமிழகம் முழுமையும் சைவசித்தாந்தக் கொள்கையைப் பரப்பினர். அறிவியல் அடிப்படையில் சமயக் கொள்கைகளைத் தருக்க முறையில் நிறுவியுள்ள இந்த நூலின் பெருமையைத் தமிழர்கள் அறிந்து கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாம்.
இந்நூலுக்குச் சிவஞானமுனிவர் முதலானோர் உரை எழுதியுள்ளனர். அவரின் உரை சிவஞான பாடியம் எனும் பெயர்பெற்ற விரிவுரை ஆகும். அது மிகவும் விரிவானது. இந்நூலுக்குச் சுருக்கமாகவும் ஓர் உரை அவரே எழுதியுள்ளார் அது சிற்றுரை எனப்படும்.

மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் (மூலம்)[தொகு]

(திருச்சிற்றம்பலம்)

சிறப்புப்பாயிரம்[தொகு]

மலர்தலை யுலகின் மாயிரு டுமியப் மலர் தலை உலகின் மா இருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக் பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போ லீண்டியகாண்டல் செல்லாக் கண் போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் இருள் தீர்ந்து
தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி // 05 //அரும் துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வற நந்தி முனிகணத் தளித்தமயர்வு அற நந்தி முனி கணத்து அளித்த
வுயர்சிவ ஞான போத முரைத்தோன்உயர் சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்பெண்ணைப் புனல் சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்பொய் கண்டு அகன்ற மெய் கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த // 10 //பவம் நனி வன் பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே.தவர் அடி புனைந்த தலைமையோன் ஏ.

சிறப்புப்பாயிரம் முடிந்தது[தொகு]

(திருச்சிற்றம்பலம்)

மங்கலவாழ்த்து[தொகு]

கல்லா னிழன்மலை கல் ஆல் நிழல் மலைவு
வில்லா ரருளிய இல்லார் அருளிய
பொல்லா ரிணைமலர் பொல்லார் இணை மலர்
நல்லார் புனைவரே.நல்லார் புனைவர் ஏ.

மங்கலவாழ்த்து முடிந்தது[தொகு]

அவையடக்கம்[தொகு]

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார்
ரெம்மை யுடைமை யெமையிகழார்- தம்மைஎம்மை உடைமை எமை இகழார் - தம்மை
யுணரா ருணரா ருடங்கியைந்து தம்மிற்உணரார் உணரார் உடங்கு இயைந்து தம்மின்
புணராமை கேளாம் புறன்.புணராமை கேளாம் புறன்.

அவையடக்கம் முடிந்தது[தொகு]

அ. பொதுவதிகாரம்[தொகு]

1. பிரமாணவியல்[தொகு]

சூத்திரம்: 01 (அவனவள்)[தொகு]

அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற்அவன் அவள் அது எனும் அவை மூ வினைமையின்
றோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதாதோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
மந்த மாதி யென்மனார் புலவர். அந்தம் ஆதி என்மனார் புலவர்.

முதல் அதிகரணம்: அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்

இரண்டாம் அதிகரணம்: தோற்றிய திதியே ஒடுங்கி உளதாம்

மூன்றாம் அதிகரணம்: அந்தம் ஆதி.


சூத்திரம்: 02 (அவையே)[தொகு]

அவையே தானே யாயிரு வினையிற் அவையே தானே ஆ இரு வினையின்
போக்கு வரவு புரிய வாணையிபோக்கு வரவு புரிய ஆணையின்
னீக்க மின்றி நிற்கு மன்றே. (02)நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

முதல் அதிகரணம்: அவையே தானே ஆய்.

இரண்டாம் அதிகரணம்: ஆணையின் இருவினையின்

மூன்றாம் அதிகரணம்: போக்கு வரவு புரிய.

நான்காம் அதிகரணம்: ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும்.


சூத்திரம்: 03 (உளதிலது)[தொகு]

உளதில தென்றலி னெனதுட லென்றலிஉளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
னைம்புல னொடுக்க மறிதலின் கண்படிஐம் புலன் ஒடுக்கம் அறிதலின் கண் படின்
னுண்டிவினை யின்மையி னுணர்த்த வுணர்தலின்உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா வியந்திர தநுவினு ளான்மா. (03)மாயா இயந்திர தநுவினுள் ஆன்மா.

முதல் அதிகரணம்: இலது என்றலின் ஆன்மா உளது.

இரண்டாம் அதிகரணம்: எனது உடல் என்றலின் ஆன்மா உளது.

மூன்றாம் அதிகரணம்: ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது.

நான்காம் அதிகரணம்: ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது.

ஐந்தாம் அதிகரணம்: கண்படில் உண்டி வினைஇன்மையின் ஆன்மா உளது.

ஆறாம் அதிகரணம்: உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது.

ஏழாம் அதிகரணம்: மாயா இயந்திர தனுவில் ஆன்மா உளது.

2. இலக்கணவியல்[தொகு]

சூத்திரம்: 04 (அந்தக்கரண)[தொகு]

அந்தக் கரண மவற்றினொன் றன்றவை அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்த மான்மாச் சகசமலத் துணராசந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே. (04)அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்து ஏ.

சூத்திரம்: 05 (விளம்பிய)[தொகு]

விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக் விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
களந்தறிந் தறியா வாங்கவை போலத்அளந்து அறிந்து அறியா ஆங்கு அவை போலத்
தாந்த முணர்வின் றமியருள்தாம் தம் உணர்வின் தமியர் உள்
காந்தங் கண்ட பசாசத் தவையே. (05)காந்தம் கண்ட பசாசத்து அவை ஏ.

சூத்திரம்:06 (உணருரு)[தொகு]

உணருரு வசத்தெனி னுணரா தின்மையிஉணர் உரு அசத்து எனின் உணராது இன்மையின்
னிருதிற னல்லது சிவசத் தாமெனஇரு திறன் அல்லது சிவ சத்து ஆம் என
விரண்டு வகையி னிசைக்குமன் னுலகே. (06)இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே.

ஆ. உண்மையதிகாரம்[தொகு]

3. சாதனவியல்[தொகு]

சூத்திரம்:07 (யாவையுஞ்)[தொகு]

யாவையுஞ் சூனியஞ் சத்தெதிராகலிற்
சத்தே யறியா தசத்தில தறியா
திருதிற னறிவுள திரண்டலா வான்மா. (07)

சூத்திரம்:08 (ஐம்புல)[தொகு]

ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
டன்னிய மின்மையி னரன்கழல் செலுமே. (08)

சூத்திரம்:09 (ஊனக்கண்)[தொகு]

ஊனக்கண் பாச முணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
யுராத்துனைத் தேர்த்தெனப் பாச மொருவத்
தண்ணிழலாம் பதிவிதி யெண்ணுமஞ் செழுத்தே. (09)

4.பயனியல்[தொகு]

சூத்திரம்:10 (அவனே)[தொகு]

அவனே தானே யாகிய வந்நெறி
யேக னாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே. (10)

சூத்திரம்:11 (காணுங்)[தொகு]

காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி
னயரா வன்பி னரன்கழல் செலுமே. (11)

சூத்திரம்:12 (செம்மலர்)[தொகு]

செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமு
மாலயந் தானு மரனெனத் தொழுமே. (12)


சிறப்புப் பாயிரம்[தொகு]

எந்தை சனற்குமர னேத்தித் தொழவியல்பாய்
நந்தி யுரைத்தருளு ஞானநூல்- சிந்தைசெய்து
தானுரைத்தான் மெய்கண்டான் றாரணியோர் தாமுணர
வேதுதிருட் டாந்தத்தா லின்று.

திருச்சிற்றம்பலம்.

மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் முற்றிற்று[தொகு]

பார்க்க:[தொகு]

[[]]:[[]]
சிவஞான பாடியம்


உண்மைநெறிவிளக்கம்
திருவருட்பயன்
வினாவெண்பா
இருபாஇருபது
உண்மைவிளக்கம்


சித்தாந்தச் சாத்திரங்கள்
[[]]:[[]]:[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=சிவஞானபோதம்&oldid=1531492" இலிருந்து மீள்விக்கப்பட்டது