உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/137⁠

விக்கிமூலம் இலிருந்து


137அப்பா! எந்த உலோகத்தையாவது கத்தியால் நறுக்க முடியுமா?

அம்மா! அநேகமாக உலோகங்கள் எல்லாம் மிகவும் கடினமான பொருள்கள்தான். சாதாரணமாக நாம் தினந்தோறும் பார்க்கும் உலோகம் எதையும் கத்தி கொண்டு நறுக்க முடியாது.

அம்மா! நாம் தினந்தோறும் உப்பை உபயோகிக்கிறோமே, அது தங்கம், வெள்ளிபோல் ஒரு தனி வஸ்துவன்று. சோடியம், குளோரின் என்னும் இரண்டு தனி வஸ்துக்கள் சேர்ந்த ஒரு கூட்டு வஸ்துவேயாகும் சோடியம் ஒரு உலோகம், குளோரின் ஒருவாயு. இரண்டும் விஷமானவை. சாப்பிட முடியாது, ஆனால் அந்த இரண்டும் சேர்ந்து நமக்கு இன்றியமையாத உணவுப் பொருளாகிய உப்பாக ஆகிவிடுகிறது. இயற்கையின் செயல்கள் எவ்வளவு அற்புதமாயிருக்கின்றன பார்த்தாயா?

இந்த சோடியம் என்னும் உலோகம் மற்ற உலோகங்களைப்போல் கடினமாயிராது. மிருதுவாகவே இருக்கும். அதை மிக எளிதாகக் கத்தியைக்கொண்டு நறுக்கிவிட முடியும்.

அதுபோல் கத்தியால் நறுக்கக்கூடிய மற்றொரு உலோகமும் இருக்கிறது. அதைப் பொட்டாஸியம் என்று கூறுவார்கள். அது சோடிய இனத்தையே சேர்ந்தது. பொட்டாஸியம் சேர்ந்த உப்பும் நம்முடைய உடம்புக்குத் தேவையானதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/137⁠&oldid=1538360" இலிருந்து மீள்விக்கப்பட்டது